விஜய் டிவி விஜே சித்ரா மரணத்தில் மறைந்திருக்கும் மர்மம் – ரசிகர்கள் அதிர்ச்சி! ஹேமநாத் தகவல்!

0

விஜய் டிவி விஜே சித்ரா மரணத்தில் மறைந்திருக்கும் மர்மம் – ரசிகர்கள் அதிர்ச்சி! ஹேமநாத் தகவல்!

சின்னத்திரையில் முல்லையாக மக்கள் மனதில் மலர்ந்த விஜே சித்ரா இறப்புக்கு பின் இருக்கும் சில திடுக்கிடும் மர்ம தகவல்களை அவரது கணவர் ஹேமநாத் மற்றும் ரேகா நாயர் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளார்கள்.

விஜே சித்ரா மரணம்:

விஜய் தொலைக்காட்சியில் குடும்ப கதையை மையமாக கொண்டும் எந்த மொழியின் மறு ஆக்கமும் இல்லாமல் தமில் மொழியில் தொடங்கிய தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லையாக மக்கள் மனதில் மலர்ந்து அதிகளவில் பிரபலமாகிய விஜே சித்ரா பல வருடங்களாக சினிமா துறையிலும், சின்னத்திரையிலும் நடித்து வந்தாலும் இந்த முல்லைக்கு கிடைத்த ரீச் அளவுக்கு கிடைத்ததில்லை. அந்த அளவுக்கு முல்லை கதாபாத்திரம் சித்ராவை தனது வீட்டில் ஒரு பெண்ணாக ரசிகர்கள் கொண்டாடும் விதம் அவரது துரு துரு பேச்சும், குழந்தைத்தனமான நடவடிக்கையும் பலருக்கும் பிடித்தது.

தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு அதிரடி நடவடிக்கை!

இந்நிலையில் தான் அவர் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்புக்கு அவர் கணவர் ஹேம்நாத் தான் காரணம் என சந்தேகம் எழுந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பரப்பாக பேசப்பட்டு வந்த சித்ராவின் மரணம் நாளடைவில் மக்கள் மறந்துவிட்டனர். ஆனால் தற்போது ஜாமினில் வெளி வந்துள்ள அவருடைய கணவர், சித்ராவை பற்றி பல உண்மைகளை கூறி மரணத்தில் இருக்கும் பின்னணியை தூசி தட்டி எடுத்துள்ளார். அதாவது சித்ராவிற்கு முன்னாள் எம்எல்ஏ மற்றும் அமைச்சருடன் தொடர்பு இருந்ததாகவும், அவர்களால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக சித்ராவே ஹேம்நாத்திடம் கூறியதாகவும் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார்.

இதை தொடர்ந்து மேலும், ஆரம்பத்தில் இருந்தே சித்ராவின் மரணத்தை குறித்து பேசிய ரேகா நாயர் தற்போது திடுக்கிடும் தகவலாக சித்ராவும் அவருடைய கணவரும் தங்கியிருந்த வீட்டில் நிறைய காண்டம் இருந்ததை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். சித்ராவுக்கு முன்னாள் எம்எல்ஏ ஒருவருடன் தொடர்பு இருந்தது குறித்து ஹேம்நாத் கூறியது உண்மைதான் மற்றும் சித்ராவுக்கு மதுபழக்கம் உட்பட நிறைய கெட்ட பழக்கங்கள் உள்ளது. அவருடைய உடலை முழுதாக பரிசோதனை செய்து இருந்தால் பல உண்மைகள் வெளிவந்து இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here