இன்ஸ்டாகிராம் பயனர்கள் கவனத்திற்கு – புதிய கட்டுப்பாடுகள் அமல்! முழு விவரம் இதோ!

0
இன்ஸ்டாகிராம் பயனர்கள் கவனத்திற்கு - புதிய கட்டுப்பாடுகள் அமல்! முழு விவரம் இதோ!
இன்ஸ்டாகிராம் பயனர்கள் கவனத்திற்கு - புதிய கட்டுப்பாடுகள் அமல்! முழு விவரம் இதோ!
இன்ஸ்டாகிராம் பயனர்கள் கவனத்திற்கு – புதிய கட்டுப்பாடுகள் அமல்! முழு விவரம் இதோ!

குறைந்த வயதுடைய குழந்தைகள் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கணக்குகளை உருவாக்குவதை தடுக்கும் விதமாக அந்நிறுவனம் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

இன்ஸ்டாகிராம் செயலி

உலகளவில் அதிகளவு பயனர்களை கொண்ட ஒரு முன்னணி சமூக வலைதள நிறுவனமான இன்ஸ்டாகிராம் இப்போது ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராம் செயலியில் இளம் வயதுடைய குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட புதிய செயற்கை நுண்ணறிவு, வயது சரிபார்ப்பு கருவிகளை அறிமுகம் செய்துள்ளது. இப்போது குறைந்த வயதுக்குட்பட்ட குழந்தைகள் இன்ஸ்டாகிராம் செயலியில் கணக்குகளை உருவாக்குவதைத் தடுக்கும் விதமாகவும், அவர்களுக்கு தெரியாத இளம் பயனர்களை தொடர்புகொள்வதை தடுக்கும் விதமாகவும் இந்த புதிய AI தொழில்நுட்பம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

ஆனால் பிரபலமான புகைப்படம் மற்றும் வீடியோ பகிர்வு ஆகிய பயன்பாட்டில் இருந்து குழந்தைகளை விலக்கி வைக்க, இந்த கருவிகள் பயன்படுத்தப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போதைய சோதனையில் ஒருவர் 18 அல்லது அதற்கு மேற்பட்டவர் என்பதைச் சரிபார்ப்பது மட்டுமே இந்த செயலியின் முக்கிய அம்சமாகும். இது குறித்து இன்ஸ்டாகிராம் நிறுவனம் அளித்துள்ள தகவலின் படி, வயதுத் தகவல்கள் மற்றவர்களுக்கு தெரியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட இந்த சமூக வலைதள ஊடகம், வயதுக்கு ஏற்ற மற்றும் பாதுகாப்பான அனுபவங்களை உருவாக்க உதவும். இது தவிர பயனர்களின் முகத்தை ஸ்கேன் செய்யும் AI பயன்பாடு, குறிப்பாக இளம் வயதினருக்கு, சில எச்சரிக்கை மணிகளை எழுப்புகிறது. இப்போது முகத்தை ஸ்கேன் செய்யும் விருப்பத்தைப் பயன்படுத்த, ஒரு பயனர் வீடியோ செல்ஃபியை பதிவேற்ற வேண்டும். அந்த வீடியோ வயதை கணக்கிடும் மென்பொருளான யோட்டிக்கு அனுப்பப்படும். இது பயனர்களின் வயதைக் கணக்கிடுவதற்கு அவர்களின் முக அம்சங்களைப் பயன்படுத்தும்.

தமிழகத்தில் நாளை (ஜூன் 29) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

மேலும் இந்த கருவிகள், ஒரு குழந்தை இன்ஸ்டாகிராம் செயலியில் எவ்வளவு நேரம் செலவிடுகிறது என்பதைக் கண்காணிக்கவும், கணக்குகளைப் புதுப்பிக்கவும் அதன் பெற்றோர்களை அனுமதிக்கும். இந்த மேம்படுத்தப்பட்ட முறைகள் ஏற்கனவே கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்புதிய கண்காணிப்பு AI அம்சங்கள், இளம் பயனர்களின் இன்ஸ்டாகிராம் பழக்கவழக்கங்களில் சில முக்கியமான வெளிப்படைத்தன்மையை பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு வழங்குகிறது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here