தமிழகத்தில் நாளை (ஜூன் 29) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
விருதுநகர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்தடை அறிவிப்பு
அந்த காலத்தில் மின்சாரம் இல்லாமல் நம் முன்னோர்கள் மண்ணெய் விளக்கை பயன்படுத்தி வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இன்றைய காலத்தில் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மின்சாரம் மாறிவிட்டது. சிறு தொழில்கள் முதல் பெரிய தொழில்கள் வரை மின் சாரத்தின் தேவை அதிகமாக இருக்கிறது. அப்படிப்பட்ட மின்சாரத்தை இரண்டு விதமாக உற்பத்தி செய்யப்படுகின்றனர். ஒன்று காற்று மற்றும் நீரில் எடுக்கப்படுகின்றன. அதன்படி, தமிழகத்தில் மாதம் ஒரு முறை மின்தடை அறிவிக்கப்பட்டு மின் நிலையங்களில் ஏற்படும் கோளாறுகள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
தமிழக பொது மக்களுக்கான முக்கிய எச்சரிக்கை – மாநகராட்சி உத்தரவு! கனமழை எதிரொலி!
குறிப்பாக மின் நிலையங்களில் உள்ள மின்னணு சாதனங்களில் ஏதேனும் கோளாறுகள் ஏற்பட்டு இருக்கிறதா, மின் இணைப்பில் ஏதேனும் துண்டிப்பு ஏற்பட்டிருக்கிறதா, வயர்களில் உராய்வு பெரும் மரக் கிளைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை மின் வாரிய ஊழியர்கள் சரி பார்த்து வருகின்றனர். அந்த வகையில் மின்தடை செய்யப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். மின்சாரம் எந்த அளவிற்கு நன்மை இருக்கிறதோ அந்த அளவிற்கு தீமையை ஏற்படுத்தும்.
Exams Daily Mobile App Download
அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான மேற்கு, காவேரி நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சத்திர ரெட்டியபட்டி, பேராளி ரோடு, கருப்பசாமி நகர், அகமதுநகர், பரங்கிநாதபுரம், விக்னேஷ் காலனி, மீனாட்சிபுரம், பாண்டியன் காலனி, இந்திரா காலனி, லட்சுமி நகர், பெத்தனாட்சி நகர், என்.ஜி.ஓ. காலனி கிழக்கு ஆகிய பகுதிகளில் மின் சார்ந்த பணிகள் நடைபெறுவதால் நாளை புதன்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்ற தகவலை மின் வாரிய நிர்வாக இன்ஜினியர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.