Work From Home ல் வேலை பார்க்கும் ஊழியர்கள் கவனத்திற்கு – புதிய விதிகள் அறிவிப்பு!

0
Work From Home ல் வேலை பார்க்கும் ஊழியர்கள் கவனத்திற்கு - புதிய விதிகள் அறிவிப்பு!
Work From Home ல் வேலை பார்க்கும் ஊழியர்கள் கவனத்திற்கு - புதிய விதிகள் அறிவிப்பு!
Work From Home ல் வேலை பார்க்கும் ஊழியர்கள் கவனத்திற்கு – புதிய விதிகள் அறிவிப்பு!

கொரோனா பரவல் காரணத்தினால் அமலுக்கு வந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக நிறுவனத்தின் பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை அமலுக்கு வந்தது. தற்போது, வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கான புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகள்:

ஒரு சிறப்புப் பொருளாதார மண்டல பிரிவில் ஊழியர்கள் அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு வீட்டிலிருந்து பணிபுரியலாம். மொத்த ஊழியர்களில் 50 சதவீத நபர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என்று வர்த்தக அமைச்சகம் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. அதன்படி, சிறப்புப் பொருளாதார மண்டல விதிகள், 2006 இல் WFHக்கான புதிய விதி 43Aஐ வர்த்தகத் துறை அறிவித்துள்ளது. அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும் நாடு தழுவிய ஒரே மாதிரியான WFH கொள்கைக்கான ஏற்பாட்டைச் செய்ய தொழில்துறையினரின் கோரிக்கையின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது என்று அமைச்சகம் கூறியது.

Exams Daily Mobile App Download

புதிய விதியானது சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள ஒரு யூனிட்டின் குறிப்பிட்ட வகை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதை வழங்குகிறது. இவர்களில் ஐடி நிறுவனத்தின் சிறப்புப் பொருளாதார மண்டல பணியாளர்களும், ற்காலிகமாக செயலிழந்த ஊழியர்கள்; பயணம் செய்யும் மற்றும் வெளியூரில் பணிபுரியும் ஊழியர்களும் அடங்குவார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும், மொத்த ஊழியர்களில் அதிகபட்சமாக 50 சதவீதத்திற்கு WFH செயல்முறை நீட்டிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளது.

வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு? மத்திய அரசு அதிரடி உத்தரவு!

“வீட்டிலிருந்து வேலை செய்வது இப்போது அதிகபட்சமாக ஒரு வருடத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், அலகுகளின் கோரிக்கையின் பேரில் DC ஆல் இது மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்படலாம்” என்று அமைச்சகம் கூறியது. ஏற்கனவே வீட்டில் இருந்தே பணிபுரியும் யூனிட்களைப் பொறுத்தமட்டில், அனுமதி பெறுவதற்கு 90 நாட்களுக்கு ஒரு மாறுதல் காலத்தை அறிவிப்பில் வழங்கியுள்ளது. மேலும், பணியாளர்களுக்கு தேவையான கருவிகளை அலுவலகத்தில் இருந்து எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!