
டெபிட் & கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர் கவனத்திற்கு – புதிய மாற்றங்கள் அமல்! முழுசா தெரிஞ்சுக்கோங்க!
இந்திய ரிசர்வ் வங்கியின் மாதாந்திர கொள்கை குழு கூட்டம் கடந்த ஜூன் 8ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் ரெக்கரிங் பேமெண்ட்ஸ் மேற்கொள்ளும் போது இ-மேண்டேட்ஸ் வரம்பை உயர்த்தி உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய மாற்றம்
இந்தியாவில் தற்போது அனைத்து துறைகளும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது ஒரு இணையதளம் அல்லது மொபைல் அப்ளிகேஷன் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் பணத்தை பரிமாற்றம் செய்ய முடிகிறது. மேலும் ஓடிடி பிளாட்ஃபார்ம்ஸ், கேஸ் பில் மற்றும் மின்கட்டண ரசீது செலுத்துதல் உள்ளிட்ட செயல்முறைகளுக்கு ரெக்கரிங் முறையில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் ரெக்கரிங் பரிவர்த்தனை மேற்கொள்ள இ-மேண்டேட் என்ற வணிக நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் வழங்கும் நிலைத் தகவல் முறை பயன்படுத்தப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அதாவது டெபிட் அல்லது கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுத்துக் கொள்வதற்கு வாடிக்கையாளர் அல்லது அட்டைதாரரால் வணிக நிறுவனங்களுக்கு இ-மேண்டேட் என்ற முறையில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. மேலும் இம்முறையைப் பயன்படுத்தி வாடகை செலுத்துதல், வருடாந்திர சப்ஸ்கிரிப்ஷன் உள்ளிட்டவைகளை மேற்கொள்ளலாம். ஆனால் இதில் ரூ.5000 என்ற வரம்பை தாண்டி பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது இ-மேண்டேட் முறையில் கூடுதலாக சரி பார்க்கப்படுகிறது. அதனால் இந்த முறையை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆலோசனை மேற்கொண்டது.
Hero நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
இந்த ஆலோசனையின் முடிவில் ரிசர்வ் வங்கி வெளியிடப்பட்ட அறிக்கையில், இ-மேண்டேட் முறை மிகவும் பாதுகாப்பாக உள்ளதால் இதில் உள்ள வரம்பை ரூ.5000 என்பதிலிருந்து ரூ.15000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை உடனடியாக அமல்படுத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளது. அத்துடன் இதனை பேமெண்ட் மற்றும் செட்டில்மெண்ட் சிஸ்டம்ஸ் சட்டம் 2007 பிரிவு 18 பிரிவு 10 (2) என்பதன் கீழ் வெளியிட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் ரூ.5,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் சரிபார்ப்பில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.