CBSE 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் கடந்த ஏப்ரல் மாதம் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் 10ம் வகுப்பு தேர்வுகள் எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
தேர்வு முடிவுகள்:
இந்தியாவில் கடந்த வருடம் பரவிய கொரோனா இரண்டாம் அலை காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆன்லைன், மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால் முதல் கட்டமாக CBSE கல்வி வாரியம் பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டது. இந்த முறை பொதுத்தேர்வு இரண்டு கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதன்படி கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் 1ம் பருவத்தேர்வு நடத்தப்பட்டது. கொள் குறி வகையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் 50 சதவீதப் பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டு 90 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டு மாணவர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கு தயாராகினர். இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்டது. தற்போது இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் உத்தரவு!
இந்த நிலையிம் CBSE 10ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாகவும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தேதியை சிபிஎஸ்இ விரைவில் வெளியிடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் CBSE பாடத்திட்டத்தின் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் இணையத்தளம் வாயிலாகவும், பள்ளிகள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.