ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – போட்டோவை அப்டேட் செய்வது எப்படி?
இந்தியாவில் ஆதார் அட்டை முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. ஆதாரில் அனைத்து விவரங்களும் அப்டேட்டாக இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் எவ்வாறு அப்டேட் செய்வது என்பது குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
புகைப்படம் மாற்றுதல்:
இந்தியாவில் பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. நமது நாட்டில் ஆதார் கார்டு தனி நபரின் அடையாள ஆவணமாக விளங்குகிறது. இதில் தனிப்பட்ட நபர்களின் பயோமெட்ரிக் டேட்டா, டெமோகிராபிக் தகவல்கள் இடம் பெற்றிருக்கும். மேலும் இந்த ஆதார் தனிப்பட்ட மற்றும் அலுவலகம் சார்ந்த வேலைகளுக்கும் கேட்கப்படுகிறது. அதேபோல மத்திய, மாநில அரசின் சலுகைகளை பெறுவதற்கும் ஆதார் தேவைப்படுகிறது. இத்தகைய பயன்பாடு உடைய ஆதாரை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்திருப்பது அவசியமாகும்.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் நாம் ஆதாரில் புகைப்படம் , முகவரி, தொலைபேசி எண் மாற்றுதல் போன்ற சிறப்பு அம்சங்களை UIDAI வழங்குகிறது. இதில் ஆன்லைன், அஞ்சல் நிலையம் வாயிலாகவும் விவரங்களை மாற்றலாம். ஆனால் புகைப்படம் மாற்றுதல் கைரேகை பதிவு போன்றவைகளை நாம் ஆதார் மையத்தில் தான் மாற்ற முடியும். டெமோகிராபிக் விவரங்களை மாற்றுவதற்கு ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த டெமோகிராஃபியில் பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி, மொபைல் எண், இ-மெயில் போன்ற விவரங்களை மாற்ற முடியும்.
Wipro நிறுவனத்தில் அருமையான வேலை – MBA பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!
அடுத்ததாக பயோமெட்ரிக் அப்டேட் கைரேகைகள், புகைப்படம் மற்றும் கருவிழி ஆகியவற்றை புதுப்பிக்க முடியும். இதற்கு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். மேலும் பயோமெட்ரிக், டெமோகிராபி இரண்டையும் புதுப்பிக்க 100 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதுமானது. அதனை தொடர்ந்து அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக ஆதாரில் புகைப்படத்தை மாற்ற என்ரோல்மெண்ட் பதிவு செய்ய வேண்டும். பிறகு அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தில் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவரம் ஆதார் மைய அதிகாரியால் சரிபார்க்கப்பட்டு நேரடியாக கைரேகை மற்றும் புகைப்படம் எடுக்கப்படும். அதன் பின் 90 நாட்களுக்குள் புகைப்படம் மாற்றப்படும்.