ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!

0
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள்!

இந்திய அரசின் ஆதார் அட்டையில் உள்ள முக்கிய விவரங்களில் அடிப்படையானது தொலைபேசி எண்கள், அவற்றில் ஏதேனும் மாற்றம் செய்யப்படுவது குறித்த வழிமுறைகளை இந்த பதிவில் காணலாம்.

ஆதார் மாற்றம்:

இந்திய தனித்துவமான ஆணையம் நாட்டின் அனைத்து குடிமகன்களுக்கும் தனித்தனி அடையாள எண்ணுடன் கூடிய அடையாள அட்டையை வழங்கி உள்ளது. ஆதார் அட்டையில் அனைவரின் பெயர், முகவரி, பிறந்த தேதி, தொலைபேசி எண் போன்ற அத்தியாவசியமான அனைத்து விவரங்களும் இருக்கும். அதில், மிகவும் அடிப்படையானது தொலைபேசி எண்கள் தான். நாம் ஆதார் அட்டை தொடர்பான எந்த ஒரு விஷயத்தை ஆரம்பித்தாலும், அதற்கு நாம் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணில் தான் OTP அனுப்பப்டும்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்குக்கு ஷாக் – அடுக்கடுக்கான முறைகேடுகள்!

இதனால் ஆதார் ஆணையம் இதற்கான வழிமுறைகளை செய்துள்ளது. மற்ற பல சேவைகளையும் ஆன்லைன் வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ள போதிலும், தொலைபேசி எண்களை மாற்றுவதற்கான வழிமுறைகள் நேரில் தான் செய்ய வேண்டியதிருக்கும். UIDAI மற்றும் உங்கள் அருகிலுள்ள ஆதார் பதிவு மையம் மூலம் விவரங்களைப் புதுப்பிக்கலாம். இதற்கு முன் அனுமதி பெற்று சென்றால் காத்திருக்கும் நேரத்தை குறைக்கலாம்.

Post Office சேமிப்பு திட்டம் – ரூ.34 முதலீட்டில் ரூ.5.32 லட்சம் வரை சலுகை! முழு விபரம் இதோ!

வழிமுறைகள்:

  • முதலில் https://uidai.gov.in இல் உள்ள அதிகாரப்பூர்வ UIDAI இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் சந்திப்பு போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும் அல்லது அல்லது URL பெட்டியில் https://appointments.uidai.gov.in/bookappointment.aspx என்ற URL ஐ உள்ளிட
  • உங்கள் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்து, ஆதார் சேவா கேந்திராவில் ‘அபாயின்ட்மென்ட்டை முன்பதிவு செய்’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • ஆதார் அட்டையில் மாற்றம் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
  • இனி,படிவத்தை பூர்த்தி செய்து ஆதார் மைய அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
  • அதன்பிறகு, ஆதார் அட்டையில் மொபைல் எண் மாற்று சேவைக்கான பணத்தை செலுத்த வேண்டும்.
  • இதற்காக ஆதார் மையத்தில் இருந்து URN உடன் ஒப்புகை சீட்டைப் பெறுவீர்கள்.
  • மொபைல் எண் மாற்றக் கோரிக்கையின் நிலையைச் சரிபார்க்க URN ஐப் பயன்படுத்தலாம்.
  • இதன் பிறகு, மூன்று மாதங்களுக்குள் உங்களின் ஆதார் அட்டையில் தொலைபேசி எண் மாற்றம் செய்யப்படும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!