Post Office சேமிப்பு திட்டம் – ரூ.34 முதலீட்டில் ரூ.5.32 லட்சம் வரை சலுகை! முழு விபரம் இதோ!

0
Post Office சேமிப்பு திட்டம் - ரூ.34 முதலீட்டில் ரூ.5.32 லட்சம் வரை சலுகை! முழு விபரம் இதோ!
Post Office சேமிப்பு திட்டம் - ரூ.34 முதலீட்டில் ரூ.5.32 லட்சம் வரை சலுகை! முழு விபரம் இதோ!
Post Office சேமிப்பு திட்டம் – ரூ.34 முதலீட்டில் ரூ.5.32 லட்சம் வரை சலுகை! முழு விபரம் இதோ!

அஞ்சலக சேமிப்பில் ஒரு நாளைக்கு ரூ.34 மட்டுமே செலுத்தி ரூ.5.32 லட்சம் வரை பெறும் ஒரு சிறந்த சலுகையை வருங்கால வைப்பு நிதி (PPF) சேவைகள் வழங்குகிறது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

சேமிப்பு திட்டம்

இன்றைய காலத்து மக்கள் மத்தியில் பணத்தை சேமிக்க வேண்டும் எனும் ஆர்வம் கொஞ்சம் அதிகமாகவே காணப்படுகிறது. ஆனால் பணத்தை எதில் சேமிப்பது, எதில் முதலீடு செய்வது என பலருக்கும் குழப்பங்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் உங்களது பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கு மிக சிறந்த சாய்ஸ் ஆக இருப்பது பொது வருங்கால வைப்பு நிதி (PPF) சேவைகள் தான். இந்த முதலீடு பாதுகாப்பானது அதே நேரத்தில் வரி விலக்கு சலுகைகளும் இதில் கொடுக்கப்படுகிறது. இது போன்ற சேவைகளை இப்போது போஸ்ட் ஆபீஸிலும் நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

TN TRB முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தடுப்பூசி கட்டாயம்!

ஆந்த வகையில் போஸ்ட் ஆபீஸ் சேவையில், வருங்கால வைப்பு நிதி (PPF) சேமிப்பு கணக்கை துவங்க இருப்பவர்களுக்கு ஒரு மிகப்பெரிய சலுகை வழங்கப்படுகிறது. அதாவது, இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை பற்றி விரிவாக பார்க்கையில், இதில் ஆண்டுக்கு ரூ.500 ரூபாய் முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். மேலும் ஒரே தவணையில் ரூ.1.50 லட்சத்தை செலுத்த முடியாவிட்டால் மாதம் ரூ.12,500 என்ற அளவிலும், ஒரு நாளைக்கு ரூ. 34 என்ற அளவிலும் இதில் முதலீடு செய்ய முடியும்.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம் – பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!

அதாவது PPF சேமிப்பில் ஒரு நாளைக்கு ரூ.34 சேமித்தால் இத்தொகை மாதம் ரூ.1,054 ஆக உயரும். அதுவே 15 ஆண்டுகள் முதிர்ச்சி காலத்திற்கு பிறகு உங்களுக்கு கிடைக்கும் மொத்த சேமிப்பு தொகை ரூ.1.80 லட்சமாக இருக்கும். இதற்கு ரூ.1.45 லட்சம் வட்டியுடன் சேர்த்து உங்களுக்கு மொத்தம் ரூ.3.25 லட்சம் கிடைக்கும். அதுவே இந்த சேமிப்பு திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால் ரூ.5.32 லட்சம் வரை பெற முடியும். அதாவது, இந்த வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்தின் முதிர்ச்சி காலம் 15 ஆண்டுகள் ஆகும். இதனை கூடுதலாக 5 ஆண்டுகள் வரை நீட்டித்து கொண்டால் சேமிப்பு முடிவில் ஒரு பெரிய தொகையை ஈட்ட முடியும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!