Ather 450X vs Ola vs Simple One Electric Scooter – மும்முனை போட்டி! சிறந்தது எது?

1
Ather 450X vs Ola vs Simple One Electric Scooter - மும்முனை போட்டி! சிறந்தது எது
Ather 450X vs Ola vs Simple One Electric Scooter - மும்முனை போட்டி! சிறந்தது எது

Ather 450X vs Ola vs Simple One Electric Scooter – மும்முனை போட்டி! சிறந்தது எது?

Ather 450X Vs Ola Vs Simple One Electric Scooter ஆகிய மூன்று ஸ்கூட்டர்களுக்கும் இடையே விற்பனையில் போட்டிகள் ஏற்பட்டுள்ளது. மாறுபட்ட தொழில்நுட்பங்கள் என்றாலும் அவை ஒரே நேரத்தில் களம் காணுவதால் அது குறித்த ஒரு அலசலை காண்போம்.

Ather 450X vs Ola vs Simple One Electric Scooter

தற்போது உள்ள ஸ்கூட்டர்களில் ஹோண்டா ஆக்டிவா விற்பனையில் முன்னணியில் இருந்து வருகிறது. இதற்கு மாற்றாக Ola நிறுவனம் Electric Scooter S1 என்ற புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றிற்கு முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டதாக அந்நிறுவனம் அறிவித்து உள்ளது. சமீபகாலமாக மின்சார வாகனங்கள் மீதே மக்களின் கவனம் அதிகமாக திரும்பியுள்ளதால், Simple One Electric Scooter, Ather 450X போன்ற புதிய ரக வாகனங்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை – 35 நாட்களுக்கு பிறகு சரிவு! 5 மாநில தேர்தல் காரணமா?

களத்தில் உள்ள வாகனங்களில் தற்போது Ather 450X, Ola, Simple One Electric Scooter இம்மூன்று வாகனங்களுக்கும் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. விளாசியை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக, Ola S1 ஸ்கூட்டர் ரூ.1.30 லட்சத்திற்கும், Simple One ரூ.1.10 லட்சத்திற்கும், Ather 450X ரூ.1.71 லட்சத்திற்கும் விற்பனை ஆகின்றன. விலைக்கான ஒப்பீட்டில் Ola Vs Simple One Electric Scooter போன்றவை கணிசமான விலையில் கிடைக்கிறது. ஆனால் சந்தைப்படுத்தலில் உள்ள மாறுபாடுகளை பொறுத்து இவை மூன்றின் விளையும் ரூ.1.30 லட்சத்திற்கு ஒன்று போலவே அமைவது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழகத்தில் அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் – முன்னாள் அமைச்சர் கோரிக்கை!

Ola, Ather 450X, Simple One Electric Scooter இம்மூன்று ஸ்கூட்டர்களின் Peak Power முறையே 8.5kW, 6kW, 4.5kW ஆகும். அதே போல் இவற்றின் பேட்டரிகள் Olaவிற்கு 3.97KWh, Ather 450Xக்கு 2.61 KWh, Simple Oneக்கு 4.8 KWh என்ற அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு இடையேயான Max.Charge Olaவிற்கு 181 km/ charge, Ather 450Xக்கு 116 km/ charge, Simple Oneக்கு 236 km/ charge என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் ஒவ்வொன்றின் தன்மையிலும் மூன்றும் மாறுபட்டதாகவும், முன்னிலை பெற்றதாகவும் உள்ளது.

தமிழக அரசின் சொத்துக்களான விமானம், ரயில் சேவைகள் தனியார் மயமாக்கல் – மத்திய அரசு முடிவு!

இந்த வகையிலான ஸ்கூட்டர்களுக்கு சம அளவில் வாடிக்கையாளர்களும் இருப்பர் என்றே கணிக்கப்படுகிறது. ஆனால் எதிர்காலத்தில் ஏற்படும் மாற்றங்களில் இவற்றின் ஆதிக்கத்தில் மாற்றங்கள் நிகழலாம் எனவும் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!