தமிழக அரசின் சொத்துக்களான விமானம், ரயில் சேவைகள் தனியார் மயமாக்கல் – மத்திய அரசு முடிவு!

0
தமிழக அரசின் சொத்துக்களான விமானம், ரயில் சேவைகள் தனியார் மயமாக்கல் - மத்திய அரசு முடிவு!
தமிழக அரசின் சொத்துக்களான விமானம், ரயில் சேவைகள் தனியார் மயமாக்கல் - மத்திய அரசு முடிவு!
தமிழக அரசின் சொத்துக்களான விமானம், ரயில் சேவைகள் தனியார் மயமாக்கல் – மத்திய அரசு முடிவு!

இந்தியாவின் கட்டமைப்பை மேம்படுத்த தமிழகத்தில் உள்ள அரசின் சொத்துக்களை தனியார் அமைப்புகளுக்கு குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

தனியார் மயமாக்கல்

கொரோனா பரவலுக்கு மத்தியில் வீழ்ச்சியடைந்து வந்த இந்திய பொருளாதாரம் தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. இதனிடையே பல வகையான சேவைகள் மீண்டுமாக செயல்பட துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள சில அரசின் சொத்துக்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது இந்தியாவின் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசுக்கு நிதி தேவைகள் உருவாகியுள்ளதால் தமிழக அரசின் சொத்துக்களை குத்தகைக்கு விட திட்டமிட்டுள்ளது.

Tokyo Paralympics 2020: டேபிள் டென்னிஸ் வீராங்கனை சோனல் படேல் அதிர்ச்சி தோல்வி!

இதன் மூலம் மத்திய அரசுக்கு 4 ஆண்டுகளில் சுமார் 6 லட்சம் கோடி கிடைக்கும் என கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பொருளாதார நிபுணர்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள முக்கியமான 4 விமான நிலையங்கள், 491 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை, நீலகிரி மலை ரயில் ஆகியவை தனியார் மயமாக்கப்பட இருக்கிறது. தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட இருக்கும் தமிழக அரசின் சொத்துக்களின் விவரங்களை பொருத்தளவு, நடப்பு நிதியாண்டில் திருச்சி விமான நிலையம், அடுத்த நிதியாண்டில் கோவை, மதுரை விமான நிலையங்கள், அதற்கு அடுத்த நிதியாண்டில் சென்னை விமான நிலையம்.

இதனுடன் 491 கிலோ மீட்டர் தொலைவிலான தேசிய நெடுஞ்சாலைகளும் குத்தகைக்கு விடப்பட உள்ளது. இந்த தொலைவுக்குள் உளுந்தூர்பேட்டை – பாடலூர் (94 கிலோமீட்டர்) நெடுஞ்சாலை, உளுந்தூர்பேட்டை- திண்டிவனம் (73 கிலோமீட்டர்) நெடுஞ்சாலை, திருச்சி – பாடலூர் (38 கிலோமீட்டர்) நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரி – தொப்பூர் கேட் (63 கிலோமீட்டர்) நெடுஞ்சாலை, ஓசூர் – கிருஷ்ணகிரி (60 கிலோமீட்டர்) 6 வழிச் சாலை, தாம்பரம் – திண்டிவனம் (61 கிலோமீட்டர்) நெடுஞ்சாலை, திருச்சி – காரைக்குடி (117 கிலோமீட்டர்) நெடுஞ்சாலை, திருச்சி புறவழிச்சாலை உள்ளிட்டவை அடங்கும்.

TN Job “FB  Group” Join Now

மேலும் NLC நிறுவனத்தின் சூரிய மின் சக்தி கட்டமைப்பு, காவிரி டெல்டா பகுதியில் உள்ள எரிபொருள் குழாய்கள், தூத்துக்குடி VOC துறைமுகம், புதுச்சேரி, சென்னை ரயில் நிலையங்கள், புதுச்சேரி மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள சில ஹோட்டல்கள், நீலகிரி மலை ரயில் போன்றவை குத்தகைக்கு விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் மற்றும் திமுக வழக்கறிஞர் சரவணன் கருத்து தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!