தர்மபுரியில் நாளை (ஜூன் 16) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – அறிவிப்பு வெளியீடு!

0
தர்மபுரியில் நாளை (ஜூன் 16) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - அறிவிப்பு வெளியீடு!
தர்மபுரியில் நாளை (ஜூன் 16) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - அறிவிப்பு வெளியீடு!
தர்மபுரியில் நாளை (ஜூன் 16) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஜூன் 16 ம் தேதியான நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மின்தடை:

உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் மின்சாரம் ஒரு முக்கிய அத்தியாவசிய தேவையாக ஆகிவிட்டது. ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு மூலம் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் மின்சாரம் தடை படாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக மின் ஊழியர்கள் மூலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

அப்பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். அவ்விதமாக நாளை வியாழக்கிழமை (ஜூன் 16)ல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அம் மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளுக்கு மின் தடை செய்யப்படவுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 15% சம்பள உயர்வு!

அவ்விதமாக மொரப்பூர், நைனா கவுண்டம்பட்டி, ராசலாம்பட்டி, சென்னம்பட்டி, எலவடை, தம்பி செட்டிப்பட்டி, கிட்டனூா், நாச்சினாம்பட்டி, செட்ரப்பட்டி, கல்லூர், பனமரத்துப்பட்டி, அப்பியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகள் என குறிப்பிட்ட பகுதிகளில் நாளை (ஜூன் 16) அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் ஆர்.ரவி தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here