மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 15% சம்பள உயர்வு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - 15% சம்பள உயர்வு!மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - 15% சம்பள உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - 15% சம்பள உயர்வு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 15% சம்பள உயர்வு!

தற்போது பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டு வரும் பாகிஸ்தான் அரசாங்கம் தனது ஊழியர்களுக்கான ஊதியத்தை 15% உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதே போல ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் 5% ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு

மத்திய அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு 5% ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பானது கூட்டாட்சி அரசாங்கத்தின் தேர்தல் சார்ந்த பட்ஜெட் உரை தேசிய சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் மத்திய அமைச்சரவை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த 15% ஊதிய உயர்வு அறிவிப்பால் அரசாங்க ஊழியர்கள் பலனடைய இருக்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இந்த அறிவிப்பை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்திற்குப் பிறகு பேசிய மத்திய தகவல் அமைச்சர் மரியம் ஔரங்கசீப், ‘நிதி அமைச்சகத்தின் 10% உயர்வு திட்டத்தை பிரதமர் நிராகரித்துள்ளார். அதே வேளையில் அமைச்சரவையின் ஒப்புதலுடன் அரசு ஊழியர்களின் சம்பளத்தை 15% ஆக உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் தற்காலிக கொடுப்பனவுகளை இணைப்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

TCS, HCL & Infosys நிறுவனங்களில் “Work From Home” தொடருமா? முக்கிய அறிவிப்பு!

இப்போது மத்திய அமைச்சரவையின் முடிவைத் தொடர்ந்து, நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் தனது பட்ஜெட் உரையில் ஊதிய உயர்வு தொடர்பான முடிவுகளை மீண்டும் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்புக்கு முன்னதாக, அடுத்த நிதியாண்டில் 5% பொருளாதார வளர்ச்சி விகிதம் மற்றும் 11.5% பணவீக்க இலக்குகளை பாகிஸ்தான் அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. இது தொடர்பான நிபுணர்களின் கூற்றுப்படி, வரவிருக்கும் தேர்தல்களில் செல்வாக்கை தக்கவைப்பதை நோக்கமாகக் கொண்ட அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here