வெளிநாட்டில் வேலை தேடுபவரா நீங்கள்? அரசின் முக்கிய எச்சரிக்கை பதிவு இதோ!

0
வெளிநாட்டில் வேலை தேடுபவரா நீங்கள்? அரசின் முக்கிய எச்சரிக்கை பதிவு இதோ!
வெளிநாட்டில் வேலை தேடுபவரா நீங்கள்? அரசின் முக்கிய எச்சரிக்கை பதிவு இதோ!
வெளிநாட்டில் வேலை தேடுபவரா நீங்கள்? அரசின் முக்கிய எச்சரிக்கை பதிவு இதோ!

வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்ல விரும்பும் பலரும் பல்வேறு மோசடி வலையில் சிக்குவதை தவிர்க்கும் விதமாக தன் நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை இலங்கை அரசாங்கம் விடுத்துள்ளது.

மோசடி எச்சரிக்கை:

பொதுவாக படித்து முடித்து பட்டம் பெற்ற ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஆசை அரசுப் பணியில் அமர வேண்டும் என்பதாக இருக்கும். இது தவிர பெரும்பாலானோரின் கனவு வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்ப்பது தான். ஆனால், வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்ய விரும்புபவர்களில் பலரும் சந்திக்கும் ஒரேயொரு பிரச்சனை மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகள் தான். அதாவது, வெளிநாடுகளுக்கு செல்ல உதவுவதாக கூறும் பல நிறுவனங்கள் அதற்கான பணங்களை பெற்றுக் கொண்டு பொது மக்களை மோசடி செய்து விடுகிறது.

Exams Daily Mobile App Download

இதற்கிடையில், வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது, சாத்தியமான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளவர்கள் கடவுச்சீட்டு அல்லது பணத்தை ஒப்படைப்பதற்கு முன்னர், ஒவ்வொரு தனிநபரின் சட்டபூர்வமான தன்மை குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

ஜீவாவை குடும்பத்தை விட்டு பிரிக்க திட்டமிடும் ஜனார்த்தனன், தாங்குமா குடும்பம்? “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

மேலும், வெளிநாடுகளுக்கு செல்ல விண்ணப்பிக்கும் முன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையங்கள் மற்றும் அந்த நிலையங்களில் இருந்து பெறப்படும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பான தகவல்கள் SLBFE இணையதளத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது, ருமேனியா, இஸ்ரேல், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வேலைவாய்ப்புகள் இருப்பதாக பெறப்படும் போலி விளம்பரங்கள் மூலம் மோசடி நடவடிக்கைகள் ஏற்பட்டு வருவதையடுத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here