மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் பெறுபவரா நீங்கள்? பட்டியலில் முதல் 10% இடம்! அறிக்கை தகவல்!

0
மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் பெறுபவரா நீங்கள்? பட்டியலில் முதல் 10% இடம்! அறிக்கை தகவல்!
மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் பெறுபவரா நீங்கள்? பட்டியலில் முதல் 10% இடம்! அறிக்கை தகவல்!
மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் பெறுபவரா நீங்கள்? பட்டியலில் முதல் 10% இடம்! அறிக்கை தகவல்!

இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.3,00,000 அல்லது மாதம் ரூ.25,000க்கு மேல் சம்பாதிக்கிறவர்களாக இருந்தால் நாட்டில் அதிக ஊதியம் பெறுபவர்கள் பட்டியலில் முதல் 10 சதவீதத்தில் நீங்கள் இடம் பெற முடியும் என்று ஆய்வுத்தகவல்கள் கூறுகிறது.

அதிக ஊதியம்:

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வேலைக்கான தேடல்கள் மற்றும் போட்டிகள் அனைத்தும் கடுமையாக இருக்கிறது. குறிப்பாக, ஒரு தனியார் அல்லது அரசுத்துறைகளில் இருக்கும் 5000 காலியிடங்களுக்கு 5 லட்சம் பேர் போட்டியிடக்கூடிய சூழல் நிலவுகிறது. இதனால், ஊழியர்களுக்கும் கூட குறைவான அளவே ஊதியம் வழங்கப்படுகிறது. இதற்கிடையில், இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.3,00,000 அல்லது மாதம் ரூ.25,000க்கு மேல் சம்பாதிக்கிறவர்கள் நாட்டில் அதிக ஊதியம் பெறுபவர்கள் பட்டியலில் முதல் 10 சதவீதத்தில் இருப்பார்கள் என்று ஆய்வுத் தகவல்கள் கூறுகிறது.

Exams Daily Mobile App Download

அதாவது, நாட்டில் நிலவும் சமத்துவமின்மை நிலை குறித்த ஒரு கண்ணோட்டத்தை இந்த அறிக்கை அளிக்கிறது. இது வருமான விவரம், தொழிலாளர் சந்தை இயக்கவியல், சுகாதாரம், கல்வி மற்றும் வீட்டு வசதிகள் போன்ற பல்வேறு குறிகாட்டிகளை கணக்கிட்டுள்ளது. இப்போது பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் பிபேக் டெப்ராய் இந்த அறிக்கையை வெளியிட்டு கூறுகையில், போட்டித்தன்மைக்கான நிறுவனம் என்ற உலகளாவிய போட்டித்திறன் முன்முயற்சியில் இந்தியப் பிரிவின் அரசாங்கத் தரவைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ‘இந்தியாவில் சமத்துவமின்மை நிலை’ அறிக்கையின் கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சனிக்கிழமைகளில் விடுமுறை! கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

நாட்டில் 90% பேர் மாதம் 25,000 ரூபாய் கூட சம்பாதிப்பதில்லை என்பதை இது காட்டுகிறது. இப்போது 2019ல் ஜூலை-செப்டம்பர் வரையும் வழக்கமான ஊதியம் பெறுபவர்களின் சராசரி மாதச் சம்பளம் கிராமப்புற ஆண்களுக்கு ரூ.13,912 ஆகவும், நகர்ப்புற ஆண்களுக்கு ரூ.19,194 ஆகவும் இருந்தது. வேலை செய்யும் கிராமப்புற பெண்களுக்கு இந்த எண்ணிக்கை ரூ.12,090 ஆகவும், நகர்ப்புற பெண்களுக்கு ரூ.15,031 ஆகவும் இருந்தது. இது தவிர உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே விரிவடையும் இடைவெளியைக் குறிக்கும் மற்றொரு புள்ளிவிவரத்தையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here