தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா வருடம்தோறும் வெகுவிமர்சியாக நடந்து வருகிறது. இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடப்பு ஆண்டு நாளை (ஏப்ரல்19) நடைபெற உள்ளது. எனவே சித்திரை தேரோட்டம் விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலம் சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகும். சமயபுர அம்மனை வழிபட தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலத்தவரும், பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சித்திரைத் தேர்த்திருவிழா, ஆடி வெள்ளி, பூச்சொரிதல் விழா போன்ற விழாக்காலங்களிலும் கூட்டம் அதிகமாகிறது. ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். குறிப்பாக ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 6 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை துவக்கம் – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

இப்பிரசித்திப் பெற்ற கோயிலில் அமைந்துள்ள அம்மன் உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்வித நோய்களும், தீவினைகளும் அனுகாது, சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை மரபிற்கு மாறாக அம்மன் தன்னைத் தானே வருத்திக் கொண்டு 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இத் தலத்தின் சிறப்பு ஆகும். பச்சை பட்டினி விரதம் பூரணம் அடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள்பாலித்தல் ஆகிய ஐந்தொழில்களையும் சித்திரை திருவிழா நாட்களில் அம்மன் செய்வதாக ஐதீகம்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை தேரோட்ட திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். நடப்பு ஆண்டு நாளை திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறுகிறது. இத்தேரோட்ட விழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா கடந்த 10ம் தேதி, கோயில் சிவாச்சாரியர்கள் கோயிலில் அமைந்துள்ள கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கோயிலின் கொடி மரத்தில் அம்மன் படம் பொருந்திய கொடியினை ஏற்றினர். இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி அளவில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு முக்கிய வீதிகளில் வலம் வரும். இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு திருச்சி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஏப்ரல் 30 சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here