இந்திய அஞ்சல் துறையில் ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி! விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
இந்திய அஞ்சல் துறையில் ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி! விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்திய அஞ்சல் துறையில் ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி! விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்திய அஞ்சல் துறையில் ரூ.60000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி! விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு

இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய அஞ்சல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மோட்டார் சேவைத் துறையின் கீழ் உள்ள ஸ்டாப் கார் டிரைவர் பணியிடத்தில் தகுதியான நபர்களை நியமிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் ஓட்டுநர் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். இப்பணியில் இப்பணியில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முதல் போட்டிக்கான உத்தேச 11 அணி!

இதற்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 56 வயது வரை உள்ளவராக இருத்தல் வேண்டும். அத்துடன் கனரக மற்றும் இலகு ரக வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும். இதில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ. 63,200 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_12012022_MMS_Delhi_Eng.pdf என்ற லிங்க் கிளிக் செய்து கொடுக்கப்படுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – நாளை நடைபெறுகிறது!

இந்த பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் வயதுச் சான்று, புகைப்படம், ஜாதிச் சான்றிதழ், அனுபவச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், SC/ST/OBC/EWS/ESM/ உள்ளிட்ட தகுதி வாய்ந்த அதிகாரியால் பெறப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றின் சுயசான்றொப்பமிடப்பட்ட நகல்களை இணைத்து வருகிற மார்ச் 10ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதனை The Manager, Mail Motor Service, Goods Shed Road, Coimbatore, 641001 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும். மேலும் இது தொடர்பான https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_13012022_MMS_Coimbatore_Eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!