தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – நாளை நடைபெறுகிறது!

0
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் - நாளை நடைபெறுகிறது!
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் - நாளை நடைபெறுகிறது!
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – நாளை நடைபெறுகிறது!

தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அவசர காலகட்டத்தில் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணியாளர்கள் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழக சுகாதாரத் துறை சாா்பில், 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்கள், 41 இருசக்கர வாகனங்கள் அவசர உதவிக்காக இயக்கப்படுகின்றன. கொரோனா தொற்று காரணமாக தற்போது கூடுதலாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அவையும் மருத்துவ சேவைகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 நாட்கள் பள்ளிகள் விடுமுறை – அரசு அறிவிப்பு!

இந்நிலையில், தற்போதைய நெருக்கடி சூழலைக் கருத்தில் கொண்டு கூடுதலாக ஓட்டுநர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளா்களை பணி அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர், டிரைவர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் திருப்பூரில் நாளை 18 ஆம் தேதி நடக்க உள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆம்புலன்ஸ் சேவை மைய அலுவலர் உதயநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயண திட்டம் ரத்து? பரவும் போலி செய்தி!

  • பணியின் பெயர்: மருத்துவ உதவியாளர், டிரைவர்
  • விண்ணப்பதாரர் வயது வரம்பு :22 முதல் 35 வரை
  • வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் : நாளை ( 18ம் தேதி)
  • வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம் : திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனை பல், கண், காது, மூக்கு பிரிவு அலுவலகத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
  • விண்ணப்பதாரர் தகுதி: பி.எஸ்.சி., நர்சிங் அல்லது லேப் டெக்னீஷியன் அல்லது டி.பார்ம் அல்லது அரசு மருத்துவ கல்லூரியில் ஒரு ஆண்டு சான்றிதழ் படிப்பு படித்த ஆண், பெண் பங்கு பெறலாம். மேலும் கல்வி, ஓட்டுனர் லைசன்ஸ் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் நேர்காணலில் சரிபார்க்க கொண்டு வர வேண்டும். பொது வாகன உரிமம் (பேட்ஜ்) மற்றும் இலகுரக வாகன டிரைவர் லைசென்ஸ் பெற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
  • மாத சம்பள விவரம்: ரூ 14,966.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!