தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கும் தேதியை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது. அதாவது சென்னை கிண்டியில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022-க்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 25 வரை விண்ணப்பிக்கலாம் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.

மாணவர் சேர்க்கை :

தமிழகத்தில், கொரோனா பொது முடக்கத்தின் போது, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்ய, இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. `இது கட்டாயம் இல்லை, மாணவர்களும் பெற்றோர்களும் விரும்பினால் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்’ என அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து 1 முதல் 3ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் “எண்ணும் எழுத்தும் திட்டம்” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம், தமிழகத்தில் 2025 ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைவரும் எண்ணறிவும் எழுத்தறிவு பெற வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளது

இந்நிலையில் சென்னை, கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், 10 மற்றும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இன்ஜினியரிங், இன்ஜினியரிங் அல்லாத தொழில் பிரிவுகளில் பயிற்சி அளிப்பதற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. சென்னை, கிண்டியில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது. இது, தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்படுகிறது. அங்கு நடப்பாண்டு இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கைக்கு, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில், வரும் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் பத்து மற்றும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இன்ஜினியரிங் மற்றும் இன்ஜினியரிங் அல்லாத தொழிற்பிரிவில் சேர்ந்து பயன் பெறலாம்.

மருத்துவமனை போன்ற நிறுவனங்களில் நடைபெறும் வரி ஏய்ப்பு – வருமானத்துறை அதிரடி!

இன்ஜினியரிங் பிரிவில் வரைவாளர் மெக்கானிக்கல், ‘பிட்டர், டூல் அண்டு டை மேக்கர், டர்னர், வெல்டர், ஒயர்மேன்’ உள்ளிட்ட பயிற்சிகளும்; இன்ஜினியரிங் அல்லாத பிரிவில், ‘டி.டி.பி., ஆப்ரேட்டர், போட்டோகிராபர், மொபைல் போன் டெக்னிஷியன்’ உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன. மேலும் பயிற்சியின்போது பாடப் புத்தகம், காலணி, சீருடை, பஸ் பாஸ், சைக்கிள் இலவசமாக வழங்கப்படும். ஆண்களுக்கு மாதம், 750 ரூபாயும்; பெண்களுக்கு, 1,000 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் உதவி தொகையுடன் கூடிய தொழில் பழகுனர் பயிற்சி மற்றும் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!