மருத்துவமனை போன்ற நிறுவனங்களில் நடைபெறும் வரி ஏய்ப்பு – வருமானத்துறை அதிரடி!

0
மருத்துவமனை போன்ற நிறுவனங்களில் நடைபெறும் வரி ஏய்ப்பு - வருமானத்துறை அதிரடி!
மருத்துவமனை போன்ற நிறுவனங்களில் நடைபெறும் வரி ஏய்ப்பு - வருமானத்துறை அதிரடி!மருத்துவமனை போன்ற நிறுவனங்களில் நடைபெறும் வரி ஏய்ப்பு - வருமானத்துறை அதிரடி!
மருத்துவமனை போன்ற நிறுவனங்களில் நடைபெறும் வரி ஏய்ப்பு – வருமானத்துறை அதிரடி!

மருத்துவமனை, மால்கள் மற்றும் வணிக நிறுவனம் போன்ற நிறுவனங்களில் அதிகளவில் வரி ஏய்ப்பு நடைபெற்று வருகிறது. இந்த வரி ஏய்ப்பை தடுக்க வேண்டும் என்பதற்காக வருமான வரித்துறை முக்கிய முடிவெடுத்துள்ளது.

வரி ஏய்ப்பு:

இந்தியாவில் பெரும்பாலும் மருத்துவமனைகள், விருந்து அரங்குகள், பெரிய பெரிய மால்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் வரி ஏய்ப்பு செய்யப்படுகிறது. இந்த வரி ஏய்ப்பை தடுக்கும் பொருட்டு மருத்துவமனைகள், விருந்து அரங்குகள் போன்றவற்றில் நடைபெறும் பண பரிவர்த்தனைகளை கண்காணிக்க வருமான வரித்துறை முக்கிய முடிவெடுத்துள்ளது. அதாவது, கடன் அல்லது வைப்புத்தொகைக்கு ஈடாக ₹20,000 அல்லது அதற்கும் மேலாக பண பரிமாற்றம் செய்வது சட்டத்திற்கு புறம்பானது.

ரூ.20,000 க்கும் ஈடாக பணப்பரிமாற்றம் செய்வதை வங்கிகள் ஏற்றுக்கொள்ள கூடாது எனவும், இத்தகைய பரிவர்த்தனைகளை வங்கிகள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது மருத்துவமனைகள் மீதான வரி ஏய்ப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. அதாவது, நோயாளிகள் மருத்துவ நிறுவனங்களுக்கு செலுத்தும் தொகையை சுகாதார சேவை வழங்குநர்களின் தரவின் மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – 9,531 பேருக்கு தொற்று உறுதி!

மேலும், மருத்துவமனைகளில் ரொக்கமாக செலுத்த அனுமதி கிடையாது எனவும் வருமானத்துறை அறிவித்துள்ளது. மேலும், தொண்டு அல்லது அரசியல் கட்சிக்கு 2 லட்சம் அல்லது அதற்கு மேல் பங்களிப்பு வழங்கப்படுவதற்கு வரி விலக்கு கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை வணிகங்கள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட அனைத்து நிறுவனங்களும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது. மேலும், சுகாதார வசதிகள் அவ்வப்போது இது போன்ற சட்டத்தை புறங்கணிப்பதாகவும் வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!