ஜூன் 10ம் தேதி வருடாந்திர சூரிய கிரகணம் – நாசா அறிவிப்பு!!
நடப்பு ஆண்டுக்கான வருடாந்திர சூரிய கிரகணம் எந்த தேதி, எந்த மணி நேரத்தில் நடைபெறவுள்ளது என்பது குறித்த தகவலை நாசா வலைத்தளம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூன் 10ம் தேதி வருடாந்திர சூரிய கிரகணம் நடைபெறவுள்ளது.
சூரிய கிரகணம்:
சூரியன் மற்றும் பூமிக்கு இடையில் நிலவு வருவது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. அவ்வாறு வரும் பொழுது சில பகுதிகளில் சூரியனின் ஒளி பாதியாகவும், சில பகுதிகளில் முழுமையாகவும் தடுக்கப்படும். மேலும் கிரகணத்தின் உச்சத்தில் வானம் இருளாக காணப்படும். ஆனால் வருடாந்திர சூரிய கிரகணத்தின் சூரியனின் முழு பார்வையையும் தடுக்க முடியாது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான வருடாந்திர சூரிய கிரகணம் எப்போது என்பது குறித்து நாசா தெரிவித்துள்ளது.
ஜூன் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு? விரைவில் முதல்வர் அறிவிப்பு!
அதன்படி ஜூன் 10ம் தேதி வருடாந்திர சூரிய கிரகணம் நடைபெறுகிறது என்று தெரிவித்தது. அன்றைய தினத்தில் கிரகண நிகழ்வு நண்பகல் 1.42 மணி முதல் மாலை 6.41 வரை நடைபெறும் என்றும் வருடாந்திர கிரகணத்தின் கால அளவு 3 நிமிடம் 51 வினாடிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நேரடியாக பார்ப்பது பாதுகாப்பல்ல என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கிரகணத்தை பின்ஹோல் ப்ரொஜெக்டர் மூலம் பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த வருடாந்திர கிரகணம் கனடா, கிரீன்லாந்து மற்றும் வடக்கு ரஷ்யாவின் பகுதிகளில் காண முடியும் என்றும் உலகின் பிற பகுதிகளில் மக்கள் சூரியனின் மேற்பரப்பில் ஒரு இருண்ட நிழலை மட்டும் காண்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாசாவின் கூற்றுப்படி, கிழக்கு கிரகணம் காணக்கூடிய பகுதிகள் கிழக்கு அமெரிக்கா, வடக்கு அலாஸ்கா, கனடாவின் பெரும்பகுதி மற்றும் கரீபியன், ஐரோப்பா, ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் சில பகுதிகள் ஆகிய இடங்களில் பலவற்றில் சூரிய உதயத்திற்கு முன்பும், நிகழும் நேரத்திலும், சிறிது நேரத்திற்கு பிறகும் கிரகணம் ஏற்படும். பொதுவாக வருடாந்திர கிரகணம் இந்தியாவில் காணப்படாது. ஆனால் அருணாச்சல பிரதேசம் போன்ற கிழக்கு மாநிலங்களில் இது தெரியும் என்று சில தகவல்கள் வெளிவந்துள்ளது.