வங்கிகளில் வயது முதிர்ந்தவர்களுக்கான FD சலுகை – ஜூன் 30 வரை நீட்டிப்பு!
இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் பல, மூத்த குடிமக்களுக்கான பிக்ஸட் டெபாசிட் (FD) சலுகைகளை அளித்து வருகிறது. வங்கிகளில் வழங்கப்படும் இந்த FD சலுகைகள் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளது.
வங்கிகளில் FD சலுகை:
விவசாயிகள், பெண்கள், வயது முதிர்ந்தவர்கள் என பலருக்கும் பயன்படக்கூடிய சேவைகளை இந்திய வங்கிகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் வங்கிகளில் கொடுக்கப்படும் சேவைகளில் முக்கியமானதாக கருதப்படுவது பிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் ஆகும். இவை அறிமுகப்படுத்தப்பட்டு குறுகிய காலமே ஆன நிலையில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் 50அடிப்படை புள்ளிகள் உள்ளிட்டவற்றை (Basic points) அளிக்கிறது.
ஜூன் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு? விரைவில் முதல்வர் அறிவிப்பு!
இந்த சேவையினை மார்ச் 31 வரை, 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இச்சலுகையானது ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் SBI, HDFC, ICICI, Bank of Baroda போன்ற வங்கிகள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கான சிறப்பு FD சலுகைகளை வழங்குகின்றது. SBI வங்கியில் இந்த ஸ்பெஷல் FD திட்டம் ‘விகேர் டெபாசிட்’ என்ற பெயரில், 30 அடிப்படை புள்ளிகளுடன் கூடுதல் பிரீமியத்தை வழங்குகிறது.
TN Job “FB
Group” Join Now
அதாவது SBI வங்கியில் FD முதலீடுகளில் ஐந்து ஆண்டுகளுக்கு 5.4% வட்டி வழங்கப்படுகிறது. ஆனால் வீகேர் திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்களுக்கு 6.20% வட்டி வழங்கப்படுகிறது. அந்த வகையில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இத்திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளலாம். இதை தொடர்ந்து HDFC யின் FD திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தவர்களுக்கு 0.75 சதவீத கூடுதல் வட்டி கிடைக்கிறது. ஆனால், இந்த சலுகையானது 5 முதல் 10 ஆண்டு காலத்திற்கு 5 கோடிக்குள் ஒரு நிலையான வைப்புத்தொகையை எதிர்பார்ப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
தொடர்ந்து ICICI வங்கியின் சிறப்பு FD திட்டம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு 0.30% கூடுதல் வட்டியை வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் 2 கோடிக்கும் குறைவான FD யில் 5 முதல் 10 ஆண்டுகள் டெபாசிட் செய்வதற்கு பொருந்தும். அந்த வகையில் இவை ஆண்டுதோறும் 6.30 சதவீத வீதத்தை வழங்குகிறது. பேங்க் ஆப் பரோடா வங்கிகளில் 100 அடிப்படை புள்ளிகளுடன் சிறப்பு FD திட்டத்தின் கீழ், 5 முதல் 10 வருடங்கள் வரை 1% tenor பெறுவார்கள். இத்திட்டத்தைப் பெறும் வயது முதிர்ந்தவர்கள் 6.25 சதவீதம் சலுகை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.