தமிழகத்தில் இன்று 197 மையங்களில் TNUSRB SI தேர்வு – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

0
தமிழகத்தில் இன்று 197 மையங்களில் TNUSRB SI தேர்வு - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று 197 மையங்களில் TNUSRB SI தேர்வு - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று 197 மையங்களில் TNUSRB SI தேர்வு – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

தமிழகத்தில் 444 காவல் உதவி ஆய்வாளர்களுக்கான எழுத்து தேர்வு இன்று 39 மையங்களுக்கு உட்பட்ட 197 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வின் முன்னெச்சரிக்கையாக வினாத்தாள் எடுத்து செல்லப்படும் வாகனங்களில் இருந்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய இயக்குநர்களால் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

காவல் உதவி ஆய்வாளர்

கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா தொற்றின் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, எந்த ஒரு அரசு தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது.அதன்பின், கொரோனா கட்டுக்குள் அடங்கிய பின் மட்டுமே தளர்வுகள் அழிக்கப்பட்டு, அரசு தேர்வுகளுக்கான தேதிகள் வெளியிடப்பட்டு தேர்வுகளை நடத்தி வந்தனர். அந்த வகையில் தற்போது 444 காவல் உதவி ஆய்வாளர்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கப்பட்டு இன்று சனிக்கிழமை தேர்வு நடைபெறுகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்த தேர்வு இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. முதன்மை எழுத்துத் தேர்வு காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடத்தப்படவுள்ளன. தமிழ் மொழி தகுதித் தேர்வு அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் மதியம் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு சுமார் 500 க்கும் மேற்பட்ட காவலர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்வை சுமார் தமிழ்நாடு முழுவதும் 39 மையங்களுக்கு உட்பட்ட 197 இடங்களில் 43 திருநங்கைகள், 43,949 பெண்கள் உட்பட 2,21,213 பேர்எழுதுகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோபி பற்றி ராமமூர்த்தியிடம் கேட்ட எழில், துபாய் போக திட்டமிட்டதை பாக்கியாவிடம் சொன்ன ராதிகா – இன்றைய எபிசோட்!

தேர்வு நடத்தும் இடங்களான 197 மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.வினாத்தாள் மற்றும் தேர்வுத்தாள்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய இயக்குநர்களால் வாகனங்களின் இயக்கத்தை கண்காணிக்கவும் தயார் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தேர்வு மையத்திற்கு தாமதமாக வருபவர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தேர்வர்கள் அனைவரும் அடையாள அட்டை, நீலம் மற்றும் கருப்பு நிற பேனா மட்டும் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!