கோபி பற்றி ராமமூர்த்தியிடம் கேட்ட எழில், துபாய் போக திட்டமிட்டதை பாக்கியாவிடம் சொன்ன ராதிகா – இன்றைய எபிசோட்!

0
கோபி பற்றி ராமமூர்த்தியிடம் கேட்ட எழில், துபாய் போக திட்டமிட்டதை பாக்கியாவிடம் சொன்ன ராதிகா - இன்றைய எபிசோட்!
கோபி பற்றி ராமமூர்த்தியிடம் கேட்ட எழில், துபாய் போக திட்டமிட்டதை பாக்கியாவிடம் சொன்ன ராதிகா - இன்றைய எபிசோட்!
கோபி பற்றி ராமமூர்த்தியிடம் கேட்ட எழில், துபாய் போக திட்டமிட்டதை பாக்கியாவிடம் சொன்ன ராதிகா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் ராமமூர்த்தியிடம் அப்பாவிடம் எதோ கோவமாக பேசிக் கொண்டிருந்தீர்கள் என்ன விஷயம் என கேட்கிறார். ஆனால் எழிலிடம் ராமமூர்த்தி சொல்லாமல் மறைகிறார். மறுபக்கம் ராதிகா பாக்கியாவை கோவிலில் சந்தித்து துபாய் செல்ல முடிவு செய்திருப்பதாக சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகாவின் அண்ணன் கோபியை திருமணம் செய்ய வேண்டும் என பிடிவாதமாக இருக்க ஆனால் ராதிகா நான் துபாய் செல்ல வேண்டும் என முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார். மறுபக்கம் பாக்கியா சமையல் செய்து கொண்டிருக்கும் போது அப்போது எதையோ யோசித்துக் கொண்டே பாக்கியா சமைக்கிறார். பின் செல்வி இப்போது தான் உப்பு போட்டாய் மறுபடியும் ஏன் உப்பு போட போகிறாய் என கேட்கிறார். பின் என்ன ஆச்சு உனக்கு என கேட்டு செல்வி பாக்கியாவை அழைத்து கொண்டு வருகிறார்.

நீ அமைதியாக உட்காரு என சொல்லி டீ போட்டு கொடுக்கிறார். பாக்கியா வேலையில் இருக்கும் போது டீ குடிக்க முடியுமா என கேட்க, அதெல்லாம் விடு உனக்கு என்ன ஆச்சு என கேட்கிறார், வீட்டில் இருக்கும் பிரச்சனை எல்லாம் நீ பேசி தீர்க்கவும் இல்லாமல் இப்படி யோசித்துக் கொண்டே இருக்கிறாய் என கேட்க பாக்கியா ஏன் சண்டை வந்தால் பார்த்து சந்தோசப்பட இருக்கிறாயா என கேட்கிறார். பின் செல்வி உன் மீது அக்கரையில் தான் கேட்டேன் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

மறுபக்கம் தாத்தா பாட்டு கேட்டுக் கொண்டிருக்க, எழில் வருகிறார். எழில் வந்ததை பார்த்து தாத்தா பாட்டு கேட்டு கொண்டிருக்கிறேன் என சொல்கிறார். நீ ஆபிஸ் போகலையா என கேட்க போனும் என சொல்கிறார். பின் எழில் உங்களிடம் ஒரு விஷயம் கேட்க வேண்டும் என சொல்ல,உன் அப்பாவிடம் காலையில் பேசியது பற்றி கேட்கிறாயா என கேட்க ஆமாம் அப்பாவிடம் என்ன பேசுனீங்க என கேட்கிறார். அதெல்லாம் ஒன்றுமில்லை என தாத்தா சொல்ல, எதாவது பிரச்சனையா என கேட்கிறார். இல்லை என தாத்தா சொல்கிறார்.

அப்பாவிடம் நீங்க கோவமாக பேசிக் கொண்டிருந்தீங்க என சொல்ல இதை பற்றி நினைக்காதே என தாத்தா சொல்கிறார். அப்போ எதோ பிரச்சனை இருக்கிறது அப்பாவும் சரி இல்லை என எழில் சொல்ல எல்லாம் சரியாகிவிடும் அவன் வந்துவிடுவான் என தாத்தா சொல்கிறார். பாக்கியாவிற்கு எல்லா உண்மையும் தெரிந்துவிட்டது என தாத்தா சொல்ல, அது யார் என்பது உங்களுக்கு தெரியுமா என எழில் கேட்கிறார். ஆமாம் என தாத்தா சொல்ல எல்லாம் சரியாகிவிடும் என தாத்தா சொல்கிறார்.

பின் ராதிகா பாக்கியாவை கோவிலில் சந்திக்க வருகிறார். உங்களிடம் பேச வேண்டும் என சொல்ல பாக்கியாவை சாமி கும்பிட்டு வர சொல்கிறார். பின் என் பிரச்சனையில் உங்களை பற்றி நான் கேட்கவில்லை. உங்க பிரச்சனை எல்லாம் சரியாகிவிட்டதா என கேட்க என்ன நடக்கிறது என எனக்கே தெரியவில்லை என பாக்கியா சொல்கிறார். பின் ராதிகா எல்லாம் சரியாகிவிடும் என சொல்ல நான் துபாய் செல்ல இருக்கிறேன் என சொல்கிறார்.

இந்தியாவில் ஒரே நாளில் 15,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – பொதுமக்கள் அச்சம்!

அப்படியா எப்போ சென்றுவிட்டு எப்போது வருவீங்க என பாக்கியா கேட்க இனிமேல் அங்கையே தான் இருக்க போகிறேன் என சொல்கிறார். பாக்கியா அதை கேட்டு அதிர்ச்சி அடைய, எனக்கு நடக்கும் பிரச்சனை எல்லாத்துக்கும் இது தான் முடிவாக இருக்கும் என ராதிகா சொல்கிறார். உங்களை எல்லாம் பார்க்காமல் என்னால் எப்படி இருக்க முடியும் என பாக்கியா வருத்தப்பட்டு பேச மயூராவை எங்க வீட்டில் விட்டு செல்லுங்கள் நான் இனியா போல பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார்.

ஆனால் ராதிகா எனக்கு அவள் மட்டும் தான் இருக்கிறாள் என சொல்ல, பாக்கியா எனக்கு எதாவது பிரச்சனை என்றால் உங்களிடம் தான் சொல்லுவேன் இப்போது எனக்கு யார் இருக்கிறார் என கேட்கிறார். ஆனால் ராதிகா என்னுடைய பிரச்சனைக்கு இது தான் ஒரே தீர்வு என சொல்ல, கேட்குறேன் என தப்பாக நினைக்க வேண்டாம் உங்களை திருமணம் செய்ய இருந்தவர் என்ன சொல்கிறார் என கேட்க பாக்கியா அதை பற்றி பேச வேண்டாம் என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here