ஜூன் 5 முதல் கடைகளை திறக்க அனுமதி – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜூன் 4 ஆம் தேதி இரவு 7.30 மணி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளன. இதனையடுத்து ஜூன் 5ம் தேதி முதல் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு, இயங்குவதற்கான நேர மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
கேரளா மாநில அரசு ஜூன் 5 முதல் ஜூன் 9ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கி உள்ளது. புதிய விதிமுறைகளின்படி, உணவு, மளிகை பொருட்கள், பழங்கள், காய்கறிகள், பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் ரேஷன் கடைகள் மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இறைச்சி, மீன், கால்நடை தீவனம் சில்லறை விற்பனைக்கு தடை இல்லை. பேக்கரிகளும் திறக்கப்படலாம். மருந்து கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் தவிர அனைத்து நிறுவனங்களுக்கும் காலை 9 மணி முதல் இரவு 7.30 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி உண்டு.
TN Job “FB
Group” Join Now
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஜூன் 9 வரை மூடப்பட வேண்டும். ஜூன் 10 ஆம் தேதி முதல் 50%க்கும் குறைவான பணியாளர்களுடன் உரிய நடைமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதியளிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்திற்குள் நுழைய விரும்பும் நபர்களுக்கு ஆர்டி-பி.சி.ஆர் சோதனை கட்டாயமாகும். அத்தியாவசியமற்ற பயணங்களைத் தடுப்பது உள்ளிட்ட பிற நடவடிக்கைகள் அமலில் இருக்கும். பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து – மாநில முதல்வர் அறிவிப்பு!!
பொது போக்குவரத்து மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு தடை நீடிக்கும். ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் டாக்சிகள் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், தடுப்பூசி மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து பயணிகளை அழைத்துச் செல்லலாம். சரக்கு வாகனங்கள் இயக்கம் வழக்கம் போல் தொடரும்.
ஜூன் 2வது வாரத்தில் பேருந்து சேவை தொடக்கம்? மாநகராட்சி திட்டம்!
முன்னதாக காலையில் காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மற்றும் மாலை இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொது இடங்களில் நடைபயிற்சி அல்லது ஜாகிங் செய்வதற்கான தடையை அரசாங்கம் தளர்த்தியது. ஹோட்டல்களில் பார்சல் வழங்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.