TN தமிழக 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வு இயக்ககம் வெளியீடு!

0

TN தமிழக 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வு இயக்ககம் வெளியீடு!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 20ம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் தொடர்பாக அரசு தேர்வு இயக்ககம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. இதையடுத்து இந்த ஆண்டு கட்டாயமான முறையில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தபடி பொதுத்தேர்வுக்குரிய கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் அறிவித்தபடி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இதையடுத்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 20ம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

10 ஆம் வகுப்பு தோல்வியுற்றவரா? – ரூ.52400/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு !

இதனை தொடர்ந்து 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்கு காத்திருந்த நிலையில் அரசு தேர்வுகள் இயக்ககம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற 2022-2023ம் ஆண்டிற்கான மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (ஜூன் 27) திங்கட்கிழமை அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாளை காலை 10 மணி அளவில் இணையதளத்தில் வெளியிடப்படும்.

இதனை காண விரும்பும் மாணவர்கள் www.deg.tn.gov.in அல்லது www.tnresults.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். இதையடுத்து மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்கள் மைய மற்றும் கிளை நூலகத்தில் தேர்வு முடிவுகளை இலவசமாக அறிந்து கொள்ள முடியும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!