மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹேப்பி நியூஸ் – 6% வரைக்கும் அகவிலைப்படி உயர்வு!

0

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹேப்பி நியூஸ் – 6% வரைக்கும் அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் 3% வரைக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 5% வரைக்கும் அகவிலைப்படி உயர வாய்ப்புள்ளதாக அறிவித்த நிலையில் தற்போது 6 சதவீதம் வரைக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவுள்ளது.

சம்பள உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பதவி, சம்பள உயர்வு முதலான பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. எப்போதும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி மார்ச் மாதத்தில் உயர்த்தப்படும் மற்றும் ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% வரைக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கி தற்போது 34 சதவீதமாக உள்ளது.

TN தமிழக 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வு இயக்ககம் வெளியீடு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அதிகரிப்பு ஏஐசிபிஐ தரத்தைப் பொறுத்து தான் வழங்கப்படுகிறது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏஐசிபிஐ குறியீடு மிகவும் உயர்ந்துள்ளதால் அகவிலைப்படி 5% வரைக்கும் உயர வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டது. 5% வரைக்கும் சம்பள உயர்வு வழங்கினால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீதத்திலிருந்து 39 சதவீதமாக உயரும். ஆனால், புதிய புள்ளிவிவரங்களின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது 6% வரைக்கும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கினால் 34 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயரும். ஊழியரின் அடிப்படை சம்பளம் தற்போது 56,900 எனில் அகவிலைப்படி சம்பள உயர்வால் கிட்டத்தட்ட 22 ஆயிரத்து 760 வரைக்கும் மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. மேலும், ஊழியரின் அடிப்படை சம்பளம் பதினெட்டாயிரம் ரூபாய் எனில் புதிய அகவிலைப்படி ரூபாய் 7200 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படும். திடீரென மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% வரைக்கும் சம்பள உயர்வு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளதால் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!