‘ராஜா ராணி 2’ ஆலியா மானஸாவுக்கு அடுத்தது ஆண் குழந்தையா? 8வது மாத ஸ்கேன்! வைரலாகும் வீடியோ!

0
'ராஜா ராணி 2' ஆலியா மானஸாவுக்கு அடுத்தது ஆண் குழந்தையா? 8வது மாத ஸ்கேன்! வைரலாகும் வீடியோ!
'ராஜா ராணி 2' ஆலியா மானஸாவுக்கு அடுத்தது ஆண் குழந்தையா? 8வது மாத ஸ்கேன்! வைரலாகும் வீடியோ!
‘ராஜா ராணி 2’ ஆலியா மானஸாவுக்கு அடுத்தது ஆண் குழந்தையா? 8வது மாத ஸ்கேன்! வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியல் நடிகை ஆலியா தற்போது 2வது முறை கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவர் தனது 8வது மாத ஸ்கேன் குறித்த சில விஷயங்களை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட அது பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.

ஆலியா மானஸா

தமிழ் சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகர் சஞ்சீவ் மற்றும் நடிகை ஆலியா மானஸா இருவரும் கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொண்டனர். விஜய் டிவியில் ‘ராஜா ராணி’ என்ற சூப்பர் ஹிட் சீரியலில் கார்த்திக் மற்றும் செம்பாவாக அறிமுகமான சஞ்சீவ் மற்றும் ஆலியா மானஸா ஜோடிக்கு ரசிகர்களிடம் இருந்து ஏகப்பட்ட ஆதரவுகள் கிடைத்து வந்தது. சீரியலில் ரொமான்டிக் ஜோடியாக நடித்து வந்த இவர்கள் இருவருக்குள்ளும் காலப்போக்கில் காதல் மலர, சீரியல் முடிந்த கையோடு திருமணம் செய்துகொண்டனர்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – சுமங்கலி பூஜை செய்யும் பாக்கியா!

இந்த திருமணம் ஆலியா மானஸாவின் வீட்டாரின் ஒத்துழைப்பு இல்லாமல் நடைபெற்றிருந்தாலும், நடிகர் சஞ்சீவின் குடும்பம் இவர்களது திருமணத்திற்கு இன்று வரையும் ஆதரவாக இருந்து வருகிறது. இந்த நட்சத்திர ஜோடி தற்போது வெவ்வேறு சீரியல்களில் நடித்து வருகிறது. இருப்பினும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர்கள் இருவரும் தங்களது மகள் ஐலாவுடன் சேர்ந்து செல்லும் சுற்றுலா, ஃ பன் ஆக்டிவிடீஸ், ஷாப்பிங், விருந்து என பல வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது 2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் ஆலியா மானஸா, தனது 8வது மாத ஸ்கேன் செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். இது தொடர்பான வீடியோவை அவர்கள் யூடியூப் பக்கத்தில் வெளியிட அது பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. இப்போது மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் ஆலியா தனக்கு சஞ்சீவை போல குழந்தை வேண்டும் என்று சொல்ல சஞ்சீவ் தனக்கு ஆலியா போல ஒரு குழந்தை வேண்டும் என்று சொல்ல இருவருக்கும் செல்ல சண்டை நடக்கிறது.

சன் டிவி “பூவே உனக்காக” சீரியலில் இருந்து விலகிய கதாநாயகி ராதிகா ப்ரீத்தி – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

பிறகு ஒரு வழியாக இருவரும் மருத்துவமனைக்கு கிளம்ப, செல்லும் வழியில் காரில் வைத்து சஞ்சீவ், ஐலா பாப்பாவுடன் இணைந்து சில கலாட்டாக்களை செய்கிறார். தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்றதும், மறுபடியும் ஐலா பாப்பாவுடன் சேர்ந்து சில நேரங்களை செலவிட்ட பின்னர், மருத்துவரை சந்திக்கும் ஆலியா ஸ்கேன் செய்து விட்டு, குழந்தையின் தற்போதைய கண்டிஷன் குறித்த சில விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்கிறார். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!