
சன் டிவி “பூவே உனக்காக” சீரியலில் இருந்து விலகிய கதாநாயகி ராதிகா ப்ரீத்தி – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
சமீபத்தில் முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் நடிகர் நடிகைகள் மாறிய செய்தி வைரலாகி வரும் நிலையில், தற்போது சன் டிவி பூவே உனக்காக சீரியலில் இருந்து ராதிகா ப்ரீத்தி விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பூவே உனக்காக சீரியல்:
தமிழ் சின்னத்திரையில் பல டாப் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. TRPயில் பல சீரியல்கள் போட்டி போட்டுக் கொண்டே இருக்கும் இந்த தருணத்தில் பல முன்னணி சீரியல்களில் இருந்து நடிகர் நடிகைகள் மாற்றப்பட்ட செய்தி அடிக்கடி வந்து கொண்டே இருக்கிறது. சன் டிவி சீரியல்களிலும், விஜய் டிவி சீரியல் நடிகர்களும் ஏகப்பட்ட பேர் மாறி இருக்கின்றனர். சன் டிவி சீரியல்களில் பலர் ரீபிளேஸ் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் சன் டிவியில் திங்கள் கிழமை முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியல் கதாநாயகி விலக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
ஜூலியை அழவைத்த பாலாஜி, பிக் பாஸ் ஹவுசில் வெடித்த சண்டை – ரசிகர்கள் அதிர்ச்சி!
அந்த சீரியலில் பூவரசி கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா ப்ரீத்தி நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக முன்னதாக கதிரவன் கதாபாத்திரத்தில் அருண் நடித்து வந்தார்.அவர் திடீரென சீரியலில் இருந்து விலகிய நிலையில் தற்போது கதிரவன் கேரக்டரில் பிரபல சின்னத்திரை நடிகரான அசீம் நடித்து வருகிறார். இந்த சீரியல் பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில், தற்போது கதாநாயகியும் விலகிய நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
விஜய் டிவியின் டாப் சீரியல்களின் நேர மாற்றம் அறிவிப்பு – ரசிகர்கள் அதிர்ச்சி!
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராதிகா ப்ரீத்தி இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறுகையில், பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகுகிறேன் என்பதை கனத்த இதயத்துடன் உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். இந்த அற்புதமான வாய்ப்பை அளித்த சன் டிவிக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன். எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பு நிறுவனத்துக்கும் நன்றி என உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டு இருக்கிறார்.