டாக்டர் மீது காதலில் விழுந்த “பாக்கியலட்சுமி” இனியா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் தற்போது தாத்தா உடல்நிலை சரி இல்லாமல் இருப்பதால் குடும்பமே சோகத்தில் இருக்கிறது. இந்நிலையில் புதிதாக வந்த டாக்டரை பார்த்து இனியா காதலில் விழுவது போல காட்சிகள் காட்டப்படுகின்றன.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோடில் தாத்தா உடல்நிலை பற்றி பாக்கியாவும் கோபியும் அக்கறை படுவதாக காட்டப்பட்டுள்ளது. அப்பா இரவெல்லாம் தூங்க முடியாமல் கஷ்டப்படுவதாக ஈஸ்வரி சொல்ல, கோபி டாக்டரிடம் சொல்லலாம் என சொல்கிறார். அப்போது எழில் இன்று பிசியோதெரபி வருவதாக சொல்கிறார். மருத்துவமனையில் இருந்து இந்த டாக்டரை வீட்டிற்கு அனுப்பியதாக சொல்கிறார். கோபி சரி என சொல்ல பின் அமிர்தா குடும்பத்தினர் வருகின்றனர்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து அடுத்தடுத்து வெளியேறும் நடிகைகள் – இயக்குனர் ஆதங்கம்!
அவர்கள் தாத்தாவை பார்த்து ஆறுதல் சொல்ல, பாக்கியா இப்போது புது ஆர்டர் எதுவும் எடுக்க வேண்டாம் என சொல்கிறார். இந்நிலையில் தாத்தாவை பரிசோதனை செய்ய பிசியோதெரபி டாக்டர் வருகிறார். அவரை பார்த்தால் சின்ன பையன் மாதிரி இருப்பதால் பாக்கியா ஆச்சர்யத்தில் இருக்கிறார். அவர் பெயர் ரஜினிகாந்த் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் நல்ல நகைச்சுவையாக பேசுகிறார். நீங்க வேணும்னா சூப்பர் ஸ்டார்ன்னு கூப்பிடுங்க என பாக்கியாவிடம் நக்கல் அடிக்கிறார். அதன்பின்னர் தாத்தாவைப் பார்த்துவிட்டு சீக்கிரம் குணப்படுத்திடலாம் இதைவிட ரொம்ப அதிகமா பாதிக்கப்பட்டவங்க எல்லாம் சரியாகி இருக்காங்க என கூறுகிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடை பிரச்சனைக்கு காரணமான நபரை கண்டுபிடித்த கண்ணன் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
பின் நாளை முதல் நான் மருத்துவம் செய்ய தொடங்கிவிடுகிறேன் என சொன்ன அவர் மீண்டும் சில நகைச்சுவைகளை அவர் சொல்ல இனியா அவரையே பார்த்துக் கொண்டே இருக்கிறார். அப்போது செழியன் வந்து என்ன செய்கிறாய் என கேட்க ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் சூப்பர்ல என சொல்ல, செழியன் உள்ளே சென்று படிக்கும் வேலையை பாரு என சொல்கிறார். இத்தனை நாளாக பள்ளி மாணவியாக காட்டப்பட்ட இனியா தற்போது காதலில் விழுவது போல காட்டப்படுவது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.