ஐலா பாப்பாவை வைத்து சமாளிக்க முடியாமல் கதறும் ஆலியா – வைரலாகும் வீடியோ!

0
ஐலா பாப்பாவை வைத்து சமாளிக்க முடியாமல் கதறும் ஆலியா - வைரலாகும் வீடியோ!
ஐலா பாப்பாவை வைத்து சமாளிக்க முடியாமல் கதறும் ஆலியா - வைரலாகும் வீடியோ!
ஐலா பாப்பாவை வைத்து சமாளிக்க முடியாமல் கதறும் ஆலியா – வைரலாகும் வீடியோ!

ஆலியாவிற்கு தற்போது ஐலா பாப்பா மற்றும் அர்ஷ் ஆகிய இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஐலா பாப்பா வளர வளர பல சேட்டைகளை செய்து கொண்டிருப்பதால் சமாளிக்க முடியாமல் ஆலியா கதறும்படியான வீடியோ வைரலாகி வருகிறது.

ஆலியா:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் ஆலியா. இவர் அதே சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். திருமணமாகி சில மாதங்களிலேயே ஆலியா கர்ப்பமானார். கர்ப்பமாக இருக்கும் போதும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தார். இதற்குப் பிறகு அவருக்கு ஐலா என்கிற அழகிய பெண் குழந்தை இருக்கிறது. பாப்பா பிறந்த பிறகும்கூட தொடர்ந்து இடைவெளியில்லாமல் சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது அர்ஷ் என்கிற மகனும் இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

ஆலியா பாப்பா வளர வளர பல சேட்டைகளை செய்து கொண்டு இருக்கிறார். எப்போது ஐலா பாப்பாவை பள்ளிக்கு அனுப்புவோம் என ஆலியா தயாராக இருக்கிறார். ஐலா பாப்பா பிறந்தபோதுகூட சஞ்சீவ் வீட்டிலேயேதான் இருந்தார். அதாவது கொரோனா காலகட்டத்தில் எந்த ஷூட்டிங்கும் இல்லாத காரணத்தினால் பாப்பாவை இருவரும் கவனித்துக் கொண்டனர். ஆனால் தற்போது சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் நடித்து வருகிறார். இருவரையும் முழுக்க முழுக்க ஆலியா தான் கவனிக்க வேண்டும் என்பதால் சீரியல்களில் இருந்து தற்போதைக்கு விலகியுள்ளார்.

விஜய் டிவி நட்சத்திரங்களை நேரில் பார்க்க வேண்டுமா? கோயம்புத்தூர் மக்களுக்கான அரிய வாய்ப்பு!

எப்போது மீண்டும் ஆலியா சீரியல்களில் என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வப்போது ஆலியா ஐலா பாப்பா மற்றும் அர்ஷுடன் இருக்கும்படியான புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். தற்போது ஐலா பாப்பாவுடன் ஆலியா விளையாடும் படியான வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஐலா பாப்பாவும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருப்பதாகவும், ஐலா பாப்பாவின் சுட்டித்தனம் ரசிக்கும்படியாக உள்ளதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!