சொகுசு காரில் மகனை அழைத்து வந்த ஆல்யா – உற்சாக மிகுதியில் ஆடிய ஐலா! வைரலாகும் வீடியோ!

0
சொகுசு காரில் மகனை அழைத்து வந்த ஆல்யா - உற்சாக மிகுதியில் ஆடிய ஐலா! வைரலாகும் வீடியோ!
சொகுசு காரில் மகனை அழைத்து வந்த ஆல்யா - உற்சாக மிகுதியில் ஆடிய ஐலா! வைரலாகும் வீடியோ!
சொகுசு காரில் மகனை அழைத்து வந்த ஆல்யா – உற்சாக மிகுதியில் ஆடிய ஐலா! வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி சீரியல் மூலம் அறிமுகமாகிய ஜோடிகள் தற்போது சோசியல் ,மீடியாவின் ட்ரெண்டிங் ஜோடிகளாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் வாங்கிய புது காரில் ஆலியாவையும் தனது மகனையும் வீட்டிற்கு அழைத்து வந்த சஞ்சீவ். அந்த வீடியோவில் இருந்த காட்சிகள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

ஆலியா, சஞ்சீவ்:

சஞ்சீவ், ஆலியா ஜோடிகள் முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள். ராஜா ராணி சீரியலில் ஆலியா உடன் சஞ்சீவ் நடித்த காதல் காட்சிகள் மூலமாக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட ஜோடிகளாக மாறினார்கள். சீரியலில் ஜோடியாக நடித்த இருவரும் நிஜ வாழ்க்கையிலும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். காதலுக்கு ஆல்யாவின் வீட்டில் பயங்கர எதிர்ப்பு எழவே, வீட்டை விட்டு வெளியேறி சஞ்சீவை கரம் பிடித்தார். இவர்களுக்கு கடந்த 2020 ல் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.

TN Job “FB  Group” Join Now

ஆல்யாவும் சஞ்சீவும் தங்கள் மகளுக்கு அய்லா சையத் எனப் பெயரிட்டனர். குழந்தை பிறந்து சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா, பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். சஞ்சீவ் அவர்களும் காற்றின் மொழி தொடரில் நடித்து அது முடிவுக்கு வர தற்போது சன் டிவி கயல் சீரியலில் எழிலாக நடித்து வருகிறார். மேலும், குழந்தை பிறக்க குறுகிய நாட்கள் உள்ள நிலையில் ராஜா ராணி 2 சீரியலை விட்டு ஆலியா விலகி அவருக்கு பதிலாக இனி மாடல் நடிகை ரியா நடித்து வருகிறார். சமீபத்தில் ஆலியாவுக்கு இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறக்க, முன்னதாகவே இன்ஸ்டாவில் சொன்னபடி அர்ஷ் என்ற பெயரையும் வைத்துள்ளார்கள்.

மீண்டும் 7 நாட்கள் ஊரடங்கு அமல் – பொதுமக்கள் அதிர்ச்சி! அரசின் முடிவு என்ன?

குறிப்பாக சஞ்சீவ் எப்பொழுதும் ஆலியாவுக்கு கொடுக்கும் கிப்ட் என்றாலே அது விலை உயர்ந்த காராக மட்டும் தான் இருக்கும். ஏனெனில் திருமணம் ஆன பொழுது ஒரு கார், ஆலியா பாப்பா பிறந்த பொழுது ஒரு கார், பிறந்தநாளுக்கு ஒரு கார் என மொத்தம் ஐந்து கார்களில் ஒன்றை சமீபத்தில் விற்றும், மற்றொன்றை நண்பருக்கு பரிசாகவும் கொடுத்திருந்தார்கள். அதை தொடர்ந்து தனது இரண்டாவது மகன் அர்ஷ் பிறந்துள்ள நிலையில் ஒரு புது கார் ஒன்றை ஆலியாவுக்கு பரிசளித்து அதில் இருவரையும் அமர வைத்து வீடிற்கு அழைத்து வந்தது போன்றும், தனது தம்பியை பார்த்து ஐலா பாப்பா செய்த க்யூட் மொமெண்ட்டுகளையும் பதிவு கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!