மீண்டும் 7 நாட்கள் ஊரடங்கு அமல் – பொதுமக்கள் அதிர்ச்சி! அரசின் முடிவு என்ன?
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஊரடங்கு:
உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது. இந்த வைரஸ் முதன் முதலில் சீனாவில் இருந்து பரவ தொடங்கியது. சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் விரைவாக பரவ தொடங்கியது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாட்டு அரசுகளும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவும், கிருமி நாசினிகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
TN Job “FB
Group” Join Now
இதன் விளைவாக கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்ததை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் இலங்கையில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மற்ற நாடுகளை தொடர்ந்து இலங்கையிலும் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவியதால் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தற்போது அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. தற்போது ஒரு தேநீரின் விலை 100 ரூபாய்க்கு விற்பனைக்கு செய்யப்பட்டு வருகிறது.
TNPSC Group 4 தோ்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – விண்ணப்பிக்க இன்னும் 10 நாட்கள் மட்டுமே!
மேலும் இந்த பொருளாதார நெருக்கடியில் 12 மணி நேர மின்வெட்டு .எரிபொருள் தட்டுப்பாட்டு பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், உணவு போன்ற பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனை வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அதிபர் மாளிகை முன்பு ராணுவத்தினர், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.