மீண்டும் ஊரடங்கு அமல் – இந்தியாவில் பாதிக்கப்படும் துறைகள் என்னனென்ன? ஒரு அலசல்!

0
மீண்டும் ஊரடங்கு அமல் - இந்தியாவில் பாதிக்கப்படும் துறைகள் என்னனென்ன? ஒரு அலசல்!
மீண்டும் ஊரடங்கு அமல் - இந்தியாவில் பாதிக்கப்படும் துறைகள் என்னனென்ன? ஒரு அலசல்!
மீண்டும் ஊரடங்கு அமல் – இந்தியாவில் பாதிக்கப்படும் துறைகள் என்னனென்ன? ஒரு அலசல்!

சீனாவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, பெரிய எண்ணிக்கையிலான கொரோனா தொற்றுநோய் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சீனாவில் மீண்டும் லாக்டவுன் போடப்பட்டு உள்ளது. இதனால் ஆப்பிள் சப்ளையர் ஃபாக்ஸ்கான், வாகன உற்பத்தியாளர்களான டொயோட்டா மற்றும் வோக்ஸ்வாகன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சீனாவில் சில செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மீண்டும் ஊரடங்கு அமல்:

கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் 2021-இல் பதிவு செய்யப்பட்டதை விட அதிகமான கொரோனா பாதிப்புகளை தற்போது சந்தித்து வருகிறது. அதனால் சீனாவில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் மற்ற நாடுகளும் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்த தொற்று நோயை விரைவில் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் கீழ் பல சீன மாகாணங்கள் மற்றும் நகரங்களில் பெய்ஜிங்கின் ‘ஸீரோ-டாலரான்ஸ்’ இலக்கிற்கான கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் தெற்கு சீனாவின் தொழில்நுட்ப மையமான ஷென்செனுக்கும் பொருந்தும். ஷென்சென் – சீனாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படுகிறது. பொது முடக்கத்தால் ஷென்செனில் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வாரம் WORK FROM HOME பார்க்க மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் – முக்கிய கோரிக்கை!

மேலும் ஷென்செனில் உள்ள ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனத்தின் செயல்பாடுகள் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது மற்றும் இடையூறுகளை சமாளிக்க பேக்கப் பிளான்ட்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொற்று காரணமாக 2 தைவானிய நிறுவனங்களும், ஷென்செனில் தத்தம் நிறுவனங்களின் செயல்பாடுகளை நிறுத்திவிட்டதை உறுதி செய்துள்ளது. அவைகள் – சிப் சப்ஸ்ட்ரேட் மற்றும் பிரிண்டட் சர்க்யூட் போர்டுகளை தயாரித்து ஆப்பிள் மற்றும் இன்டெலுக்கு சப்ளை செய்யும் நிறுவனமான யுனிமிக்ரான் டெக்னாலஜி கார்ப் ஆகும். கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த சீனாவின் மற்ற நகரங்களிலும் பல்வேறு அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

TNUSRB SI தேர்வர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் & நேரடி பயிற்சி வகுப்புகள்! குறைந்த கட்டணம்!

தொடர்ந்து சாங்சுன் நகரில் லாக்டவுன் மற்றும் ஷாங்காயின் ‘பைனான்ஷியல் ஹப்’பில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் டோங்குவானின் ‘மேனுஃபேக்சரிங் சென்டரில்’ பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதை அடுத்து சீனாவின் எஃப்ஏடபுள்யூ (FAW) குழுமத்துடனான கூட்டு முயற்சியை நிறுத்திவிட்டதாக டொயோட்டா கடந்த வாரம் தெரிவித்தது. மேலும் எஃப்ஏடபுள்யூ உடன் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ள வோக்ஸ்வாகன், கடந்த வாரம் திங்கள் முதல் புதன் வரை அதன் ‘வெஹிக்கில்’ மற்றும் ‘காம்போனென்ட்’ ஆலைகளில் உற்பத்தியை நிறுத்தி வைத்திருந்ததும் குறிப்பிட வேண்டியவை ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!