தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – நாளை (ஜூன் 22) முதல் தொடக்கம்!

0
தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - நாளை (ஜூன் 22) முதல் தொடக்கம்!
தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - நாளை (ஜூன் 22) முதல் தொடக்கம்!
தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – நாளை (ஜூன் 22) முதல் தொடக்கம்!

தமிழகம் முழுவதும் நேற்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் வெளியீடு வெளியிடப்பட்டுள்ளது. எனவே அரசு கலை கல்லூரிகள் மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் ஜூன் 22ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரி

தமிழகத்தில் கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. அதன்பின்னர் கொரோனா குறைந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வழைக்க பட்டனர். அதுமட்டுமின்றி, இரண்டு வருடங்களாக மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படாததால் இந்த வருடம் கண்டிப்பான முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கப்பட்டிருந்தது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி,10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுக்கான வெளியீடுகள் வெளியிடப்பட்டது. ஆகையால், மாணவர்கள் அனைவரும் படிப்பிற்கு தகுந்த கல்லூரிகளை தேர்வு செய்து விண்ணப்பங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர விரும்புபவர்கள் வரும் ஜூன் 22ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

இந்த கலை கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு விண்ணப்பங்களை www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதள பக்கத்தில் வருகிற ஜூலை 7ம் தேதி விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. இணையதள வாயிலாக விண்ணப்பிக்க முடியாமல் இருக்கும் மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க தகுந்த வழிவகை செய்துள்ளதாகவும் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் இணையதள மூலம் செலுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.

எழில் திருமணம் பற்றி பேசிய ஈஸ்வரி, போலீஸ் ஸ்டேஷன் விளக்கம் கொடுத்த கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

அப்படி இணையதள மூலம் கட்டணத்தை செலுத்த முடியாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் ‘The Director, Directorate of Collegiate Education, Chennai – 6” என்ற பெயரில் வருகிற 27ம் தேதி அல்லது அதற்குப் பின்னர் வங்கி காசோலை மூலம் அல்லது நேரடியாகவும் வந்து செலுத்தலாம். மேலும், இது குறித்த விபரங்களுக்கு 044 – 28260098 / 28271911 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஜூன் 27ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கவுள்ளதாக தமிழ்நாடு உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!