எழில் திருமணம் பற்றி பேசிய ஈஸ்வரி, போலீஸ் ஸ்டேஷனில் விளக்கம் கொடுத்த கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
எழில் திருமணம் பற்றி பேசிய ஈஸ்வரி, போலீஸ் ஸ்டேஷன் விளக்கம் கொடுத்த கோபி - இன்றைய
எழில் திருமணம் பற்றி பேசிய ஈஸ்வரி, போலீஸ் ஸ்டேஷன் விளக்கம் கொடுத்த கோபி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
எழில் திருமணம் பற்றி பேசிய ஈஸ்வரி, போலீஸ் ஸ்டேஷனில் விளக்கம் கொடுத்த கோபி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், எழில் திருமணத்தை பற்றி ஈஸ்வரி பேச பாக்கியா அதை நினைத்து வருத்தப்படுகிறார். பின் கோபி போலீஸ் ஸ்டேஷன் வந்து ராதிகாவை திருமணம் செய்ய இருப்பதாக சொல்லி பிரச்சனையை முடித்து வைக்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ராஜேஷ் போலீசிடம் புகார் கொடுக்க அதனால் போலீஸ் கோபிக்கு போன் செய்து வர சொல்கிறார். அதை கேட்டு கோபி கண்டிப்பாக வருகிறேன் என சொல்கிறார். மறுபக்கம் ஈஸ்வரி சொந்தக்காரர் ஒருவரிடம் போன் செய்துவிட்டு பாக்கியாவிடம் அவர் போன் செய்தால் எடுக்காதே என சொல்கிறார். பின் ஊரில் தாசில்தாராக இருப்பவர் அவருடைய பெண்ணிற்கு எழிலை மாப்பிள்ளை கேட்டு இருப்பதாக ஈஸ்வரி சொல்கிறார். அதை கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.

Exams Daily Mobile App Download

இப்பவே என்ன அவசரம் என கேட்க ஈஸ்வரி அவன் சினிமா துறையில் இருக்கிறான் அதனால் சீக்கரம் செய்ய வேண்டும் என சொல்கிறார். பின் செல்வி ஏன் எழிலிற்கு திருமணம் வேண்டாம் என சொல்கிறீர்கள் என கேட்க அவனுக்கு என்ன வயது ஆகிறது என பாக்கியா கேட்கிறார். செல்வி தம்பி சினிமாவில் இருக்கிறார் அதனால் தான் என சொல்கிறார். பின் ஈஸ்வரி வந்து பாக்கியாவிடம் சமைக்க செல்லவில்லையா என கேட்க பாக்கியா போக வேண்டும் அதற்கு முன்னதாக ராதிகா வீட்டிற்கு போய்ட்டு வருகிறேன் என சொல்கிறார்.

அங்கே பிரச்சனை என சொன்னது முதல் எனக்கு மனது சரி இல்லை என பாக்கியா சொல்கிறார். ஈஸ்வரி அவங்க பிரச்சனையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என சொல்ல ஆனால் பாக்கியா தனக்கு மனது கேட்பதில்லை என சொல்கிறார். ஈஸ்வரி சரி போய்ட்டு வா என சொல்கிறார். பின் கோபி போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார். அங்கே ராஜேஷ் இவன் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என சொல்ல, போலீஸ் நீங்க யார் என கேட்கிறார் என் பெயர் கோபி என சொல்ல உங்களுக்கும் ராதிகாவிற்கும் என்ன பிரச்சனை என கேட்கிறார்.

அப்போது கோபி நானும் ராதிகாவும் திருமணம் செய்ய இருக்கிறோம் என சொல்ல ராஜேஷ் பொய் சொல்கிறான் என சொல்கிறார். அவனுக்கு குடும்பம் இருப்பதாக சொல்ல அப்போது கோபி எனக்கும் என் மனைவிக்கும் விவாகரத்து நடக்க இருக்கிறது என சொல்கிறார். நீங்க சண்டை போட்ட வீடியோ இருக்கிறது என சொல்ல அது சும்மா சின்ன பிரச்சனை என சொல்கிறார். ராஜேஷ் என் பெண்ணிற்கு போன் செய்து கேளுங்க என சொல்ல, கோபி மயூரா என் மீது மிகவும் பாசமாக இருப்பார் என சொல்கிறார். பின் கோபி போன் செய்து பேசுகிறார்.

மயூரா ராஜேஷ் போலீசில் புகார் கொடுத்திருப்பதாக சொல்லி அழுகிறாள். பின் நீங்க வீட்டிற்கு வந்தால் தான் நான் சந்தோசமாக இருப்பேன் என சொல்ல, கோபி நான் போலீஸ் ஸ்டேஷனில் தான் இருக்கேன் நீ பயப்படாதே என சொல்கிறார். பின் மயூரா உங்களுடன் பேசாமல் என்னால் இருக்க முடியவில்லை என சொல்ல, பின் கோபி எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார். ராதிகாவின் அம்மா ராஜேஷ் ஒரு குடிகாரன் துபாயில் என் மகளை அப்படியே விட்டு வந்துவிட்டான் என் மகள் தான் என் பேத்தியை வளர்கிறாள் இவனிடம் இருந்து காப்பாற்ற தான் கோபியை திருமணம் செய்து வைக்க இருக்கிறோம் என சொல்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் 24ம் தேதியன்று உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

ராஜேஷ் இவன் எதற்கு இப்போது என் மகளை பார்க்கிறாள் என கேட்க கோபி இவனுடன் இருக்கும் போது வாழ விடவில்லை. இப்போது எங்களையும் வாழ விடாமல் இருக்கிறார் என சொல்ல, ராஜேஷ் என் மகளை காப்பாற்ற தான் இப்படி எல்லாம் செய்கிறேன் என ராஜேஷ் சொல்கிறார். பின் ராதிகாவின் அம்மா கோபிக்கு ஆதரவாக பேச என் மகளை கொடுத்துவிட்டு இவர்களை என்ன வேண்டும் என்றாலும் செய்ய சொல்லுங்க என சொல்கிறார். மயூரா கோபி வருவதில் எந்த பிரச்சனையும் இல்லை என சொல்லிவிட்டார். அவங்க அம்மா அண்ணனும் கல்யாணம் செய்ய சம்மதித்து இருக்கின்றனர்.

அதனால் இதற்கு மேல் இந்த பிரச்சனையை பற்றி பேச வேண்டாம் என போலீஸ் சொல்கிறார். நீங்க இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக லெட்டர் எழுதி கொடுத்துவிட்டு போங்க என போலீஸ் சொல்கிறார். பின் மயூரா தனியாக இருக்க பாக்கியா வருகிறார் மயூரா உள்ளே வர சொல்ல, நான் மட்டும் தனியாக இருக்கேன் என சொல்லி அழுகிறார். அழ கூடாது என சொல்லி பாக்கியா ஆறுதல் சொல்கிறார். ராஜேஷ் அப்பா அம்மா மீது புகார் கொடுத்திருக்கிறார் அதனால் போலீஸ் ஸ்டேஷன் சென்று இருப்பதாக சொல்கிறார். பின் போலீஸ் லெட்டர் எழுதி கொடுக்க சொல்ல கோபி கண்டிப்பாக எழுதி தரேன் என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here