தமிழக தொடக்கப்‌ பள்ளிகளில்‌ ஆசிரியர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
தமிழக தொடக்கப்‌ பள்ளிகளில்‌ ஆசிரியர் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழக தொடக்கப்‌ பள்ளிகளில்‌ ஆசிரியர் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழக தொடக்கப்‌ பள்ளிகளில்‌ ஆசிரியர் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

அரியலூர்‌ மாவட்டத்தில்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறையின்‌ கட்டுப்பாட்டில்‌ இயங்கி வரும்‌ ஆதிதிராவிடர்‌ நல தொடக்கப்‌ பள்ளிகளில்‌ காலியாக உள்ள ஆசிரியர்‌ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 18 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 18.01.2023-க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ஆதிதிராவிடர்‌ நல தொடக்கப்‌ பள்ளி
பணியின் பெயர் ஆசிரியர்‌
பணியிடங்கள் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.01.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:

ஆதிதிராவிடர்‌ நல தொடக்கப்‌ பள்ளிகளில்‌ 18 இடைநிலை ஆசிரியர்‌ / பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடம்‌ காலியாகவுள்ளது. மேற்கண்ட காலிப்பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக்குழு மூலம்‌ முற்றிலும்‌ தொகுப்பூதிய முறையில்‌ தற்காலிகமாகவும்‌, நிபந்தனையின்‌ அடிப்படையிலும்‌ நிரப்பப்படவுள்ளது.

தொடக்கப்‌ பள்ளி பணிக்கான கல்வி தகுதி:

ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில்‌ உள்ள விதிகளைப்‌ பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட கல்வித்‌ தகுதியுடன்‌, ஆசிரியர தகுதித்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்று இல்லம்‌ தேடி கல்வித்‌ திட்டத்தில்‌ தன்னார்வாளராக இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்‌. (இல்லையெனில்‌) வரையறுக்கப்‌ பட்ட கல்வித்‌ தகுதிகளுடன்‌, ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்விலும்‌ தோச்சி பெற்றிருக்க வேண்டும்‌. இடைநிலை ஆசிரியர்‌ நியமனத்தில்‌ பட்டியலினத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்‌. மேலும்‌ அந்தந்த பகுதிகளில்‌ உள்ளவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்‌.

இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு – தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.. 62,000 வரை ஊதியம்!

சம்பள விவரம்:

இடைநிலை ஆசிரியருக்கு ரூ.7,500 வீதம்‌ ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தனது எழுத்து மூலமான விண்ணத்தினை உரிய கல்வித்‌ தகுதி சான்றாவணங்களுடன்‌ நேரடியாகவோ அல்லது அஞ்சல்‌ மூலமாகவோ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு 18.01.2023-க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!