இந்து அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு – தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்.. 62,000 வரை ஊதியம்!
தமிழக இந்து அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
காலிப்பணியிடங்கள்:
தமிழக இந்து சமய அறநிலைத்துறையில் கீழ் இயங்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாதஸ்வரம், தவில் தாளம். சுருதி ஆகிய கருவிகளை இசைக்கும் இசை கலைஞர்கள் காலிப்பணியிடங்கள் உள்ளது. இப்பணியிடத்திற்கு 18 வயது முதல் 45 வயது உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் பணிக்கு விண்ணப்பிக்கும் இசைக்கலைஞர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட இசை பள்ளியில் பயின்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
SBI MF-ல் Relationship Manager காலிப்பணியிடங்கள் – ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
அத்துடன் தமிழில் நன்றாக படிக்கவும் நன்றாக எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும் இந்து மதத்தை சேர்ந்த ஆண்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட தகுதியுடைவர்கள் www.tiruchendurmurugan.hrce.in.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து. அதனை சரியாக நிரப்ப வேண்டும். அதனுடன் அரசு உயரதிகாரிகளிடம் இருந்து பெற்ற நன்னடத்தை சான்றிதழை இணைக்க வேண்டும்.
மேலும் இசை பயிற்சி பெற்ற சான்றிதழ் மற்றும் பிற தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பத்தினை இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் – 628215, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்பணிக்கு தேர்ந்தெடுக்கபடுபவர்களுக்கு பதவி வாரியாக அதிகபட்சம் 62,000 வரை ஊதியம் அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் 27.1.2023 ஆம் தேதி மாலை 5.45க்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.