மீண்டும் சன் டிவி ‘வானத்தை போல’ சீரியலில் இணையும் நடிகை சுவேதா – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

0
மீண்டும் சன் டிவி 'வானத்தை போல' சீரியலில் இணையும் நடிகை சுவேதா - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
மீண்டும் சன் டிவி 'வானத்தை போல' சீரியலில் இணையும் நடிகை சுவேதா - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
மீண்டும் சன் டிவி ‘வானத்தை போல’ சீரியலில் இணையும் நடிகை சுவேதா – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

பட வாய்ப்பின் காரணமாக சுவேதா வானத்தை போல சீரியலில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகினார். தற்போது மீண்டும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி வானத்தை போல சீரியலில் இணைய போவதாக அறிவித்துள்ளார்.

வானத்தை போல:

சன் டிவி, விஜய் டிவி மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் வானத்தை போல சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. அண்ணன் தங்கையின் பாசப்போராட்டத்தை மக்களுக்கு எடுத்து காட்டும் வகையில் இந்த வானத்தை போல தொடர் அமைந்து வருகிறது. இந்த சீரியலில் அண்ணன் கதாபாத்திரத்தில் தமன் குமாரும், தங்கச்சி கதாபாத்திரத்தில் சுவேதா என்பவரும் நடித்து வந்தனர். சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் தமன் குமாரும் சுவேதாவும் சீரியலில் இருந்து விலகினர்.

Exams Daily Mobile App Download

இந்த சீரியலில் ஸ்வேதா அறிமுகமாவதற்கு முன்பாகவே ஜெமினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மதுமாசம் என்கிற தெலுங்கு சீரியலில் நடித்து வந்தார். இது மட்டுமல்லாமல் கன்னட சீரியலிலிலும் சுவேதா நடித்திருக்கிறார். இந்த சீரியல் சுவேதாவுக்கு அவ்வளவாக ரீச்சை கொடுக்கவில்லை. இதனால் தமிழ் தொடரில் நடிக்க அறிமுகமானார். சுவேதா மட்டுமல்லாமல் தமன்குமாரும் சும்மா நச்சுனு இருக்கு, தொட்டால் தொடரும், சேது பூமி, புயலா கிளம்பி வரோம், 6 அத்தியாயம், நேத்ரா போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

ராதிகாவுடன் கோபி இருப்பதை பார்த்து ஷாக்கான மீனா – சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!

வானத்தை போல தொடர் தான் சுவேதாவிற்கு நல்ல எதிர்காலத்தை கொடுத்தது. சீரியலில் அறிமுகமாகி சில மாதங்களிலேயே துளசி கதாபாத்திரம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை கொடுத்தது. இவருக்கு பதிலாக புதுமுக நடிகை சீரியலில் அறிமுகமானார். சுவேதா மட்டுமே துளசி கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என ரசிகர்கள் மீண்டும் சீரியலில் இணையும்படி கேட்டு கொண்டனர். ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி ஸ்வேதா சீரியலில் மீண்டும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here