‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் லட்சுமி அம்மா? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் லட்சுமி அம்மா? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் லட்சுமி அம்மா? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ரீஎன்ட்ரி கொடுக்கும் லட்சுமி அம்மா? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், பாசமான அண்ணன் தம்பிகளின் அம்மாவாக லட்சுமி அம்மா கதாபாத்திரம் சீரியலில் இருந்து முடிவடைந்த நிலையில், தற்போது லட்சுமி அம்மா மூர்த்தி உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதை பார்த்து லட்சுமி அம்மா ரீஎன்ட்ரி கொடுத்திருக்கிறாரா என ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரையில் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் அண்ணன், தம்பிகள், அண்ணிகள் என அனைவரும் பாசத்துடன் ஒற்றுமையாக இருந்து வருகின்றனர். அவர்களின் அம்மாவாக லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடிகை ஷீலா நடித்து வந்தார். 3 ஆண்டுகளாக அவர் சீரியலில் இருந்த நிலையில் திடீரென அவர் இறந்து விட்டது போல கதை கொண்டு செல்லப்பட்டது. அதனால் நடிகை ஷீலா அந்த சீரியலில் இருந்து விலகினார்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – உலகநாயகன் கமல்ஹாசன் தொடர்வாரா?

அதை தொடர்ந்து அவர் “பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தின் அம்மாவாக நடித்து வருகிறார். ஷீலா அம்மா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியதால் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு அது ஆறுதலாக இருந்தது. அவர் மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரீ என்ட்ரி கொடுப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வர வாய்ப்பே இல்லை என தெரிந்தபின் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் ரோஷினி ஹரிப்ரியனின் சினிமா பயணம் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா மற்றும் லட்சுமி அம்மா கதாபாத்திரத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்டாலின் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி அம்மா ரீஎன்ட்ரி கொடுக்க போகிறாரா என அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அப்படி இல்லை. பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் அண்ணன் கதாபாத்திரத்தில் தான் மூர்த்தி நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. எப்படியோ மூர்த்தி மற்றும் லட்சுமி அம்மாவை மீண்டும் மகன் அம்மா கதாபாத்திரத்தில் பார்த்த ரசிகர்கள் இந்த எபிசோட் எப்போது வரும் என உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!