விஜய் டிவி ‘பிக் பாஸ்’ ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – உலகநாயகன் கமல்ஹாசன் தொடர்வாரா?

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - உலகநாயகன் கமல்ஹாசன் தொடர்வாரா?
விஜய் டிவி 'பிக் பாஸ்' ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - உலகநாயகன் கமல்ஹாசன் தொடர்வாரா?
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – உலகநாயகன் கமல்ஹாசன் தொடர்வாரா?

நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் அவர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கமல்ஹாசன்:

தமிழில் முன்னணி நடிகரான கமல்ஹாசன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த இந்தியன், அவ்வை சண்முகி, தசாவதாரம் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவருக்கு உலக நாயகன் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இப்போது வரை இவர் படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக தான் உள்ளது. அடுத்ததாக விக்ரம், இந்தியன் 2 ஆகிய படங்கள் வரவுள்ளது. இவர் சினிமாவை தொடர்ந்து அரசியல், இலக்கியங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் ரோஷினி ஹரிப்ரியனின் சினிமா பயணம் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

இவர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை உருவாக்கி தலைவர் பதவி வகித்து வருகிறார். அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் கமல்ஹாசன் அவர்கள் அண்மையில் அமெரிக்கா சென்று வந்தார். தற்போது கொரோனா தாக்கம் குறைவாக இருப்பதால் வெளிநாடு சென்று வந்த பிறகு இவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை. இந்த நிலையில் இவருக்கு திடீரென சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டது. அதனால் இவர் கொரோனா பரிசோதனை செய்த போது இவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” ஜெனி, செழியன் திருமண நாள் – வெளியான வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

தற்போது இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார். இந்த நிலையில் இனி யார் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது என்ற கேள்வி எழுப்பட்டது. அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் சிம்பு, விஜய் சேதுபதி போன்ற பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் இது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நேரத்தில் புதிய தகவலாக கமல்ஹாசனுக்கு தொற்று தாக்கம் குறைவு தான். மருத்துவர்களின் ஆலோசனை படி அவர் நிகழ்ச்சியை விர்ச்சுவலாக தொகுத்து வழங்க முடியும் என அவர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் கமல்ஹாசனின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!