விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் ரோஷினி ஹரிப்ரியனின் சினிமா பயணம் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" சீரியல் ரோஷினி ஹரிப்ரியனின் சினிமா பயணம் - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் ரோஷினி ஹரிப்ரியனின் சினிமா பயணம் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலின் வெற்றிக்கு முதல் காரணமாக இருந்த ரோஷினி ஹரிபிரியனின் சினிமா பயணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரோஷினி ஹரிபிரியன்:

தமிழ் சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்றாக விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் இடம் பிடித்துள்ளது. இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுடைய எதார்த்தமான நடிப்பால் மக்களிடம் பிரபலமாக இருக்கின்றனர். இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரமான பாரதியாக அருண் பிரசாத் நடித்து வருகிறார். மேலும் அவருக்கு ஜோடியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் முதலில் ரோஷினி ஹரிபிரியன் என்பவர் 2 ஆண்டுகளாக நடித்து வந்தார்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” ஜெனி, செழியன் திருமண நாள் – வெளியான வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

அவர் கண்ணம்மாவாக வாழ்ந்து வந்தார் என்றே சொல்லலாம். சென்னையை சேர்ந்த அவர் முதலில் பிசினஸ் செய்து வந்தாராம். அதன் பின் மாடலிங்கில் ஈடுபாடு வரவே அவரே புகைப்படங்கள் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவாராம். அதன் பின் அவருக்கு விஜய் டிவி பாரதி கண்ணம்மாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். சின்னத்திரையில் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே தனக்கொரு தனி இடத்தை ‘கண்ணம்மா’ ரோஷினி ஹரிப்ரியன் பிடித்திருக்கிறார். ஆனால் இந்த சீரியலில் இரண்டு பிள்ளைக்கு அம்மாவாக நடிப்பதால் பல வெள்ளித்திரை வாய்ப்புகள் அவருக்கு வராமல் போனதாம்.

“கயல்” சீரியல் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய சைத்ரா ரெட்டி – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

அதனால் தான் சீரியலில் இருந்து விலகுகிறேன் என பெரிய முடிவு ஒன்றை அவர் எடுத்திருக்கிறார். மேலும் அவரை வெள்ளித்திரையில் பார்க்கலாம் என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். தற்போது அவரது கதாபாத்திரத்தில் வினுஷா என்பவர் நடித்து வருகிறார். அவர் இவரை போலவே அச்சு அசலாக இருந்தாலும் ரோஷினி போல நடிப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். மேலும் ரோஷினி விலகலுக்கு பின் TRPயில் பெரிய வீழ்ச்சியை பாரதி கண்ணம்மா சீரியல் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!