விஜய் டிவி “பாக்கியலட்சுமி” ஜெனி, செழியன் திருமண நாள் – வெளியான வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாக்கியலட்சுமி" ஜெனி, செழியன் திருமண நாள் - வெளியான வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” ஜெனி, செழியன் திருமண நாள் – வெளியான வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ஜெனிபர், செழியன் திருமணம் முடிந்து ஒரு ஆண்டு முடிவடைந்ததை நடிகை நேஹா மேனன் தனது இன்ஸ்டா பக்கத்தில் காமெடியாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி:

“பாக்கியலட்சுமி” சீரியல் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் இல்லத்தரசிகள் படும் கஷ்டங்கள் குறித்து கதை அமைக்கப்பட்டுள்ளது. அனைவரின் வீட்டில் நடக்கும் சின்ன சின்ன சம்பவங்களை கதையில் கொண்டு வந்துள்ளதே இந்த சீரியலின் வெற்றியாக இருக்கிறது. இந்த சீரியலில் பாக்கியா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் சுசித்ரா நடித்து வருகிறார். மேலும் அவருக்கு ஜோடியாக கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதிஸ் நடித்து வருகிறார்.

‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் நுழைந்த அடுத்த வைல்ட் கார்டு போட்டியாளர் இவர் தானா? ரசிகர்கள் உற்சாகம்!

அவர்களின் மூன்று பிள்ளைகளாக செழியன், எழில், இனியா கதாபாத்திரத்தில் ஆர்யன், விஷால், நேஹா மேனன் நடித்து வருகிறார்கள். செழியனின் மனைவியாக ஜெனிபர் கதாபாத்திரத்தில் திவ்யா கணேஷ் நடித்து வருகிறார். அவர் செழியனை காதலித்து வர அவர் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் வீட்டில் எதிர்ப்புகள் கிளம்புகிறது. ஆனால் பாக்கியா மகன் சந்தோசம் தான் முக்கியம் என சொல்லி இருவரையும் சேர்த்து வைக்க நினைக்கிறார். ஆனால் ஜெனி வீட்டில் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

“கயல்” சீரியல் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய சைத்ரா ரெட்டி – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

அதனால் ஜெனி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ய அப்போது பாக்கியா வந்து ஜெனியை காப்பாற்றி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார். அவர்களுக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் தான் திருமணம் முடிந்துள்ளது. அதை நேஹா மேனன் நகைச்சுவையாக திவ்யாவிடம் தெரிவித்து இருக்கிறார். அவருடன் சீரியலில் ஜெனிக்கு அம்மாவாக நடிக்கும் மரியம் இருக்கிறார். மேலும் திருமண நாள் அன்று அதிகமாக சாப்பிட்டு விட்டோம் எனவும் அதற்கு காரணம் டாடி தான் என சீரியலில் அவருக்கு தந்தையாக நடிப்பவரை காட்டி இருக்கிறார். ஜெனி ரசிகர்கள் அவருக்கு திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!