ஜீ தமிழ் “பூவே பூச்சூடவா” சீரியல் ரேஷ்மா, மதன்னிற்கு விரைவில் திருமணம் – அவரே வெளியிட்ட பதிவு!

0
ஜீ தமிழ்
ஜீ தமிழ் "பூவே பூச்சூடவா" சீரியல் ரேஷ்மா, மதன்னிற்கு விரைவில் திருமணம் - அவரே வெளியிட்ட பதிவு!
ஜீ தமிழ் “பூவே பூச்சூடவா” சீரியல் ரேஷ்மா, மதன்னிற்கு விரைவில் திருமணம் – அவரே வெளியிட்ட பதிவு!

ஜீ தமிழ் பூவே பூச்சூடவா சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்தவர்கள் ரேஷ்மா மதன் ஜோடி இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தேதி குறித்த பதிவை ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரேஷ்மா, மதன் திருமணம்:

பூவே பூச்சூடவா சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா. அவருக்கு ஜோடியாக அந்த சீரியலில் கார்த்திக் நடித்தார். அதன் பின் அவர் சீரியலில் இருந்து விலகினார். கதாநாயகனுக்கு தம்பியாக மதன் நடித்தார். மதனுக்கு ஜோடியாவும் ரேஷ்மாவிற்கு அக்காவாகவும் மீனாட்சி கதாபாத்திரத்தில் கிருத்திகா நடித்தார். சீரியலில் ஒன்றாக நடிப்பது மூலமாக ரேஷ்மா, மதன் ஜோடிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்க தொடர்ந்து ஜோடியாக பல புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேட் ஆகும் போட்டியாளர் இவர்தான் – ரசிகர்கள் அதிர்ச்சி!

மேலும் இருவரும் இணைந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிய சீரியல் ஒன்றில் நடித்து வருகின்றனர். சின்னத்திரையில் அழகிய ஜோடியாக வலம் வந்த இவர்கள் சமீபத்தில் நடந்த ஷபானா, ஆர்யன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அது குறித்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களது திருமணம் எப்போது என தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் DNA டெஸ்ட் எப்போ தான் எடுப்பீங்க? ரசிகர்கள் கமெண்ட்டில் குமுறல்!

அதற்கு பதில் தரும் விதமாக ரேஷ்மா திருமண தேதி குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி ரேஷ்மா மதன் ஜோடிக்கு வருகிற நவம்பர் 15 ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக ரேஷ்மா இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்னும் 2 நாட்களில் திருமணம் என்பதால் ரசிகர்கள் அந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து ஜீ தமிழ் கதாநாயகிகள் காதல் திருமணம் செய்து வருவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!