திடீரென கோவப்பட்ட நடிகை ஆலியா மானசாவின் மகள் – வைரலாகும் வீடியோ! குவியும் லைக்குகள்!
சின்னத்திரையில் டாப் கதாநாயகிகளில் ஒருவாராக இருந்த நடிகை ஆலியா மானசாவின் மூத்த மகள் ஐலாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அவளுடைய குறும்புத்தனத்தை பார்த்த பலர் அவளுடைய வீடியோவை விரும்பி பார்ப்பார்கள் இந்நிலையில் ஐலா பாப்பா கோவப்படும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.
ஐலா பாப்பா வீடியோ:
தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு சினிமாவை மிஞ்சும் அளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றனர். சினிமா நடிகர் நடிகைகளுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு சீரியல் நடிகர் நடிகைகளுக்கு இருக்கின்றனர். ஆனால் சினிமாவை விட ஒரு படி மேலே சென்று குடும்பத்தில் ஒருவாராக பார்க்கும் அளவிற்கு சீரியலை விரும்பி பார்க்கின்றனர். அந்த வகையில் சின்னத்திரையில் டாப் கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை ஆலியா மானசா.
Exams Daily Mobile App Download
அவர் விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த நிலையில் தற்போது சீரியலை விட்டு விலகி இருக்கிறார். காரணம் அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது என்பதால் ஆலியாவின் நடிப்பை தவிர அவருடைய குடும்பத்திற்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அவருடைய கணவர் மாமியார் மகள் என அனைவருமே ட்ரெண்டிங்கில் இருக்கின்றனர். இந்நிலையில் ஆலியாவின் மகள் ஐலா பிறந்தது முதல் தற்போது வரை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக இருக்கிறார்.
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வரும் மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
அவருடைய குறும்புத்தனமான சேட்டைகளையும், க்யூட் சிரிப்பையும் பார்க்க பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் ஐலாவிற்கு தற்போது குட்டி தம்பி பிறந்து இருக்கிறான் அவனை பாசத்துடன் கவனித்து வருகிறாள் ஐலா. ஆனால் ஐலாவின் கோவம் எப்படி இருக்கும் என்பது குறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் கோவத்தில் அண்ணன் மீது பொம்மையை ஏறிய அதை அவன் எடுத்து கொடுக்கிறான். ஆனால் மீண்டும் ஐலா பொம்மையை எறிகிறாள். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் ஐலாவின் இந்த வீடியோவும் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.