மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ‘திருமதி செல்வம்’ அபிதா – ரசிகர்கள் மகிழ்ச்சி!

0
மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 'திருமதி செல்வம்' அபிதா - ரசிகர்கள் மகிழ்ச்சி!
மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் 'திருமதி செல்வம்' அபிதா - ரசிகர்கள் மகிழ்ச்சி!
மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ‘திருமதி செல்வம்’ அபிதா – ரசிகர்கள் மகிழ்ச்சி!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட திருமதி செல்வம் சீரியல் மூலமாக ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்த அபிதா நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அபிதா:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட திருமதி செல்வம் என்கிற சீரியல் மூலமாக தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தவர் தான் அபிதா. இந்த தொடருக்கு பிறகு சில சீரியல்களில் நடித்து இருந்தாலும் கூட திருமதி செல்வம் சீரியல் அளவுக்கு எந்த சீரியலும் அபிதாவிற்கு வரவேற்ப்பை கொடுக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப்பிறகு அபிதா தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் மாரி என்கிற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அதாவது அபிதா இந்த தொடரில் சீரியல் நாயகிக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

KTM பைக்கை தொலைத்து விட்டு BMW பைக் வாங்கிய மணிமேகலை – வைரலாகும் வீடியோ!

ஏற்கனவே சன் தொலைக்காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கண்ணான கண்ணே சீரியலிலும் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சீரியலில் இருந்து தற்போது விலகியே இருக்கிறேன். இந்த சீரியலிலும் 6 முதல் 7 நாட்கள் வரை மட்டுமே சூட்டிங் இருக்கும் எனக் கூறியதால் மட்டுமே நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். இந்த ஆறு ஏழு நாள் ஷூட்டிங்கிற்கே எனது குழந்தைகள் போகவிடாமல் அடம்பிடித்து கொண்டிருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

என் குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் சூட்டிங் கிளம்பும் போதெல்லாம் சூட்டிங் எப்படியாவது கேன்சல் ஆகிவிட வேண்டும் எனவும் ரயிலை நான் மிஸ் செய்துவிட வேண்டும் எனவும் வேண்டி கொண்டிருக்கின்றனர். அந்த அளவுக்கு என்னை எங்கும் போகவிடாமல் அன்பால் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றனர். இயக்குனர் அடிக்கடி என்னிடம் கேட்டுக் கொண்டதால் மட்டுமே இந்த சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். மேலும் பல நாட்களுக்குப் பிறகு சீரியலில் நடிக்க இருப்பதால் ஆர்வமாகவும் இருக்கிறது என ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு சீரியலில் அபிதாவை பார்க்கவுள்ள மகிழ்ச்சியில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!