KTM பைக்கை தொலைத்து விட்டு BMW பைக் வாங்கிய மணிமேகலை – வைரலாகும் வீடியோ!

0
KTM பைக்கை தொலைத்து விட்டு BMW பைக் வாங்கிய மணிமேகலை - வைரலாகும் வீடியோ!
KTM பைக்கை தொலைத்து விட்டு BMW பைக் வாங்கிய மணிமேகலை - வைரலாகும் வீடியோ!
KTM பைக்கை தொலைத்து விட்டு BMW பைக் வாங்கிய மணிமேகலை – வைரலாகும் வீடியோ!

சில நாட்களுக்கு முன்பாகவே மணிமேகலை ஆசை ஆசையாக வாங்கிய கேடிஎம் பைக் தொலைந்துபோனது. அதனை அடுத்து தற்போது BMW பைக்கை மணிமேகலை வாங்கியிருக்கும் குஷியில் இருக்கும்படியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

BMW பைக்:

சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ப்ரீயா விடு என்ற நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் எக்கச்சக்கமான ஆதரவைப் பெற்றவர் தான் மணிமேகலை. தொகுப்பாளினியாக அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆகியும் தற்போதும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்று பல ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது தனது கணவருடன் வெளிநாடு, வெளியூர் பயணங்கள் மேற்கொண்டு அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

HCL நிறுவனத்தில் B.Tech படித்தவர்க்கு காத்திருக்கும் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

சில நாட்களுக்கு முன்பாகவே மணிமேகலை மற்றும் மணிமேகலையின் கணவர் இருவருக்குமே பிறந்தநாள் முடிவடைந்தது. இருவருமே மாற்றி மாற்றி ஒருவருக்கு ஒருவர் சர்ப்ரைஸ் கொடுத்து பிறந்தநாள் விழாவை மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடினர். மேலும், சில நாட்களுக்கு முன்பாகவே மணிமேகலை ஆசை ஆசையாக வாங்கிய கேடிஎம் பைக் தொலைந்துவிட்டது. அந்த கேடிஎம் பைக் கண்டுபிடிக்க மணிமேகலை மிகவும் அலைந்து கொண்டிருந்தார். தற்போது அதிக விலை மதிப்புள்ள BMW பைக் ஒன்றை வாங்கியுள்ளார்.

புது பைக் வாங்கிய மகிழ்ச்சியில் யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இந்த பைக்கையாவது சரியாக கவனித்துக் கொள்ளுங்கள் என ரசிகர்கள் கிண்டல் அடித்து கமெண்ட் செய்து கொண்டிருக்கின்றனர். மணிமேகலையின் நீண்ட நாள் கனவான BMW பைக் டெலிவரி செய்த மகிழ்ச்சியில் மணிமேகலை துள்ளிக்குதிக்கும் படியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதிது புதிதாக பல லட்சங்கள் செலவு செய்து சொகுசு காரை வாங்கிக் கொண்டிருக்கும் பிரபலங்களின் மத்தியில் மணிமேகலையின் ஆசையைக் கண்டு ரசிகர்கள் வியப்படைந்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!