நடிகர் விஜயின் கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பதிவு – ரசிகர்கள் உற்சாகம்!

0
நடிகர் விஜயின் கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பதிவு - ரசிகர்கள் உற்சாகம்!
நடிகர் விஜயின் கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பதிவு - ரசிகர்கள் உற்சாகம்!
நடிகர் விஜயின் கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பதிவு – ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், சமீபத்தில் தேர்தலில் வாக்களிக்க வந்த பயன்படுத்திய காருக்கு அவர் இன்சூரன்ஸ் எடுக்கவில்லை என்று எழுப்பப்பட்ட சர்ச்சைக்கு தற்போது விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்

பொதுவாக திரையுலகை சேர்ந்த பலரும் எப்போதுமே தங்களது தனிப்பட்ட விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பது உண்டு. ஏனென்றால் ஒரு நடிகர் அல்லது நடிகையை பற்றிய தனிப்பட்ட விஷயங்களை அவர்கள் வெளிப்படையாக ஷேர் செய்யும் பட்சத்தில், அந்த விஷயம் பல விதத்தில் திரித்து பேசப்படுவதும், எழுதப்படுவதும் உண்டு. சில நேரங்களில் இது சர்ச்சைக்கு கூட வழிவகுத்து விடும். இதற்கெல்லாம் பதில் கூறி நேரத்தை செலவழிக்க முடியாது என்பதற்காக சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை ரகசியமாகவே வைத்து கொள்கின்றனர்.

சன் டிவி ‘கயல்’ சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை சைத்ரா ரெட்டிக்கு நடந்த விபரீதம் – வைரலாகும் வீடியோ!

இந்த லிஸ்டில் இடம்பிடித்திருக்கும் ஒரு முக்கியமான நபர் இளையதளபதி நடிகர் விஜய். தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் மீடியாவின் கண்களில் இருந்து மறைந்து இருந்து வந்தாலும், அவ்வப்போது இவரை பற்றி வரும் சில கருத்துக்கள் சமூக வலைதளங்களில் சர்ச்சையை உருவாக்கி வருகிறது. அதாவது, கடந்த பிப்.19ம் தேதியன்று நடைபெற்ற தேர்தலின் போது, நடிகர் விஜய் மாருதி சிலேரியோ என்ற எளிமையான காரில் வந்திருந்தார். இந்த காரின் இன்சூரன்ஸ் 2020ம் ஆண்டே முடிவடைந்து விட்டதாகவும், 2021ல் அவர் இன்சூரன்ஸ் செலுத்தவில்லை என்றும் அவருக்கு எதிராக சில விமர்சனங்கள் எழுப்பப்பட்டது.

எதிர்வரும் மாற்றங்களை சமாளிப்பாரா கண்ணம்மா? – ‘பாரதி கண்ணம்மா’ புதிய ட்விஸ்ட்!

இது குறித்து விளக்கம் கொடுத்துள்ள ரியாஸ் கே அகமத் என்பவர், தளபதி விஜய் வந்த காருக்கான இன்சூரன்ஸ் 2022 மே 28 வரை செல்லுபடியாகும் என்று கூறி அந்த இன்சூரன்ஸ் காப்பியையும் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு விஜய் மீது எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற 65வது படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் வரும் ‘ஹலமித்தி அபி பூ’ என்ற பாடல் பிப்.14ம் தேதியன்று வெளியாகி எக்கச்சக்கமான பார்வையாளர்களை ஈர்த்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!