சன் டிவி ‘கயல்’ சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை சைத்ரா ரெட்டிக்கு நடந்த விபரீதம் – வைரலாகும் வீடியோ!

0
சன் டிவி 'கயல்' சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை சைத்ரா ரெட்டிக்கு நடந்த விபரீதம் - வைரலாகும் வீடியோ!
சன் டிவி 'கயல்' சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை சைத்ரா ரெட்டிக்கு நடந்த விபரீதம் - வைரலாகும் வீடியோ!
சன் டிவி ‘கயல்’ சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை சைத்ரா ரெட்டிக்கு நடந்த விபரீதம் – வைரலாகும் வீடியோ!

சன் டிவி ‘கயல்’ சீரியலில் கயலாக நடித்து வரும் நடிகை சைத்ரா ரெட்டியை, அவரது அண்ணன் கழுத்தை பிடித்து நெரிப்பது போல படமாக்கப்பட்டு வரும் ஷூட்டிங் ஸ்பாட் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை சைத்ரா ரெட்டி

தமிழ் சின்னத்திரை தொடர்களில் தொடர்ச்சியாக முன்னணி இடத்தை பிடித்து வரக்கூடிய ‘கயல்’ சீரியல் தற்போது 100 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்றைய கால கட்டத்தை சேர்ந்த மக்களின் ரசனைக்கு ஏற்ப ரொமான்ஸ், ஆக்ஷன் காட்சிகளுடன் சினிமா பட பாணியில் எடுக்கப்பட்டு வரும் சீரியல்களுக்கு மத்தியில், முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘கயல்’ சீரியல் TRP ரேட்டிங்கில் டாப் இடத்தை வகித்து வருகிறது.

எதிர்வரும் மாற்றங்களை சமாளிப்பாரா கண்ணம்மா? – ‘பாரதி கண்ணம்மா’ புதிய ட்விஸ்ட்!

அந்த வகையில் ‘கயல்’ சீரியல் வெளியாகி வெறும் 3 மாதங்களே கடந்திருக்கும் நிலையில், இந்த அளவுக்கு ரீச் கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம் இதில் நடித்து வரும் ஆர்டிஸ்டுகள் தான். இந்த சீரியலில் ஒரு குடும்பத்தின் மொத்த பாரத்தையும் சுமக்கும் கயல் என்ற முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிகை சைத்ரா ரெட்டி நடித்து வர, இவருக்கு ஜோடியாக விஜய் டிவி ‘ராஜா ராணி’ புகழ் சஞ்சீவ் நடித்து கொண்டிருக்கிறார். இவர்களின் கயல் – எழில் காம்போ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இது தவிர ‘கயல்’ சீரியலில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவின் நடிப்பும் அவ்வப்போது பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்துடன் சேர்ந்து தனம் அண்ணி செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!

இதில் குறிப்பாக கொட்டும் மழையில் நனைந்தபடி எடுக்கப்பட்ட காட்சிகளில் நடிகை சைத்ரா ரெட்டி அர்ப்பணிப்புடன் நடித்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அதே போல மின்சாரத்தால் தாக்கப்பட்ட பெண்ணை சைத்ரா ரெட்டி காப்பாற்றுவது போன்று எடுக்கப்பட்ட ‘கயல்’ சீரியலின் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த வரிசையில் ‘கயல்’ சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து சைத்ரா ரெட்டியை அதாவது கயலை அவரது அண்ணன் மூர்த்தி கழுத்தை பிடித்து நெரிப்பது போல சில காட்சிகள் படமாக்கப்பட்டு வர, இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி மீண்டும் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!