எதிர்வரும் மாற்றங்களை சமாளிப்பாரா கண்ணம்மா? – ‘பாரதி கண்ணம்மா’ புதிய ட்விஸ்ட்!
பாரதி கண்ணம்மா சீரியலில் அனைவரும் எதிர்பார்த்து வந்த கண்ணம்மாவின் பிறந்த நாளும் வந்து விட்டது. தான் ஒரு ரகசியத்தை சொல்ல இருப்பதாக கண்ணம்மா கூறி வரும் நிலையில், அதன் பிறகு வரும் மாற்றங்களை எப்படி எதிர்கொள்ள போகிறார் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.
புதிய ட்விஸ்ட்:
பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி தான் தன் குழந்தை லக்ஷ்மியின் அப்பா என்பதை அனைவர்க்கும் தெரியவைக்க வேண்டும் என்று கண்ணம்மா எவ்வளவோ போராடி வருகிறார். ஆனால் பாரதி கண்ணம்மா மீது வைத்துள்ள சந்தேகத்தின் காரணமாக மீண்டும் கண்ணம்மாவை அதிகமாக வெறுத்து வருகிறார். இப்படி இருக்கையில் கண்ணம்மாவின் பிறந்த நாளில் லக்ஷ்மியின் அப்பா கட்டாயம் வருவார் என்று கண்ணம்மா சொல்லி விடுகிறாள். இதனால் லட்சுமி அதிக ஆர்வத்துடன் தனது அப்பாவை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறாள்.
BB Ultimate| இந்த வார எலிமினேஷன் பட்டியலில் அபிராமி, சுருதி, வனிதா – ரசிகர்கள் ஷாக்!
பிறந்த நாளும் வந்து விட்டது. அதற்கு முன் பல முறை அழைத்தும் வராத பாரதியை மீண்டும் கண்ணம்மா வந்து அழைக்கிறாள். பாரதியை வரவைப்பதற்க்காக தன் பிறந்த நாளில் யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றை கண்ணம்மா சொல்லப்போவதாக சொல்கிறாள். இதனால் பாரதி போய் விடுவானோ என்று பயந்து வெண்பா பாரதியை மீண்டும் அதிகமாக தூண்டி விடுகிறாள். கண்ணம்மா அப்படி என்ன தான் சொல்லப்போகிறாள் என்று அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்துடன் சேர்ந்து தனம் அண்ணி செய்த காரியம் – வைரலாகும் வீடியோ!
கண்ணம்மா ஹேமா தன் குழந்தை தான் என்று சொல்ல இருப்பதாக சௌந்தர்யாவிடம் சொல்கிறாள். அதை சொல்ல வேண்டாம் என்று சௌந்தர்யா எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காமல் கண்ணம்மா பிடிவாதமாக இருக்கிறாள். ஹேமாவும் கண்ணம்மா பெற்ற குழந்தை தான் என்பதை அறிந்து கொள்ளும் பாரதி அடுத்து எடுக்கப்போகும் முடிவு என்ன என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கு இந்த வார இறுதி வரை ரசிகர்கள் பொறுத்திருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.